இளம் சமுதாயம் மன உளைச்சல்களிலிருந்து மீட்சிபெற பாடசாலைகளில் யோகக்கலை ஒரு பாட விதானமாக !

(சட்டத்தரணி கனக நமநாதன் )

முப்பது வருட உள்நாட்டு யுத்தம் பல அவலங்களையும் அமைதியின்மையையும் புதிய அனுபவங்களையும்; அத்தியாயங்களையும் எமது வாழ்க்கைக்கு தந்துவிட்டு சென்றுவிட்டது. 1505ம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையில் வந்திறங்கி பின் 1619ம் ஆண்டளவில்; நடந்ததாகக் கூறப்படும் ஐஐம் சங்கிலி மன்னனுடனான யாழ்ப்பாணததைக் கைப்பற்றும் யுத்தத்திற்குப் பின் யுத்தத்தைப்பற்றி எதுவும் அறியாதிருந்த தமிழ் மக்களுக்கு உள்நாட்டு யுத்தம் பலவகையான உயிர் உடலங்க சொத்து இழப்புக்களையும் அவலங்கமான அனுபவங்களையும் மாற்றங்களையும் மன உழைச்சல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்றால் அது மிகைப்பபடுத்தப்பட்டதல்ல. இழப்புக்களை அளவிடமுடியாதுள்ளது. அனுபவங்களைச் சொல்லமுடியாதுள்ளது. மாற்றங்களை விபரிக்க முடியாதுள்ளது மன உளைச்சல்களைத் தீர்க்க முடியாதுள்ளது.
மன உளைச்சல்களினால் பாதிக்கப்பட்ட இளம் சிறார்களைக் குறிநோக்காகக் கொண்டே இக்கட்டுரை முன்வைக்கப்படுகின்றது. தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் ஜந்தாம் ஆண்டு அல்லது பத்தாம் ஆண்டு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் 2009ம் ஆண்டைய இறுதிக்கட்ட முள்ளிவாய்கால் யுத்தத்தின் கோரமுகத்தினை நேரடியாகவோ ஊடகங்கள் கணணிகள் மூலமாகவோ பார்த்தும் கேட்டும் அறிந்துமிருப்பார்கள். அதன் தாக்கம் பிரதிபலிப்பு மன உணர்வு என்பன வெளிப்படையாகத் தோற்றாவிட்டாலும் கூட உள்மனதில் மறக்க முடியாமலும் உறக்கத்தில் தூங்கக்கூட முடியாமலும் மனத்திரையில் தொங்கித் துரத்திக் கொண்டேயிருக்கும். மனதில் பயங்கள் இருப்பின் படிப்பில் சிரத்தையின்மை ஒருநிiலைப்படுத்த முடியாத சிந்தனைகள் போன்றவையும் இன்னும் எவரினாலும் விபரிக்க முடியாத ஆனால் உளவியலாளர்களினால் மட்டுமே கண்டறியக்கூடிய ஊகித்தறியக்கூடிய விடயங்களும் இருக்கலாம். போரினால் கூடுதலாக பாதிப்படைந்த வடமாகாணத்தில் சிறிது காலமாக பரீட்சைகளின் பெறுபேறுகளை சுட்டிக்காட்டி கல்வியின் தராதரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஊடகங்களில் வெளியானதை மறந்திருக்க முடியாது.
இவற்றையும்விட கடந்த முப்பது வருட கால போர்ச்சூழல் இளைஞர் சமுதாயத்தை புதியதோர்; திசையை நோக்கி பயணிக்கவும் செய்துவிட்டது என்பதும் உண்மை. பெற்றோருக்கடங்காமை பெரியோரை மதிக்காமை ஆசிரியர்;களையும் அறிஞர்;களையும் கௌரவப்படுத்தாமை சமய வழிபாடுகளில் ஈடுபடாமை போன்ற நல்லொழுக்கங்களிலிருந்து விலகிச் செல்லும்; மனப்பான்மை இளம் சமுதாயத்தில் உருவாக்ப்பட்டுள்ளது. இவற்றிற்கு மேலும் மூர்க்கத்தனத்தை அதிகரிப்பது போன்று தென்னந்திய திரைப்பட ஆதிக்கம் இவ் இளைஞர்; யுவதிகளை ஆட்கொண்டு ஆட்டிப் படைத்து வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலைகளிலிருந்து எமது வருங்கால சமுதாயத்தை நல்வழிப்படுத்தி பாதுகாத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என நாம் எல்லோரும் உண்மையில் எண்ணம்; கொண்டவர்களாக இருக்க வேண்டுமெனில் உடலின் ஆரோக்கியம் மட்டுமன்றி உள்ளத்திற்கும் நல்லொழுக்கத்தை பேணிக்கொள்ள வழிவகுத்துக் கொடுக்கும் யோகக் கலையைப் பற்றி அறிதலும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் சிறுவயதிலிருந்தே பயிலக் கற்றுக் கொடுக்க வேண்டியதும் கல்விச் சமூகத்தின் தலையாய கடமையாகின்றது.
இந்தியாவில் தமிழ் நாட்டில் கல்விக் கூடம் அனைத்திலும் யோகாசனமும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டு படிப்பிக்கப்பட்டு வருகின்றது. இங்கும் முன்றாம் அல்லது நான்காம் வகுப்பு மட்டத்திலிருந்து பாடசாலைகளில்; யோகக்கலையை ஒரு பாடவிதானமாக சேர்க்கப்பட வேண்டியது இந்த காலகட்டத்தின் தேவைப்பாடாகும்.
இதை வட-கிழக்கு மாகாண சபைகள் தங்களது அமர்வுகளில் ஒரு விடயமாக நிகழ்ச்சி நிரலில் சேர்த்து விவாதித்து நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
இந்த ஆலோசணையை செயற்படுத்துவதற்கு முதலில் தேவையான யோகாசனப் பயிற்றுவிப்பாளர்கள் உருவாக்கப்பட வேண்டும். உடனடியாக ஒரே சமயத்தில் சகல பாடசாலைகளிலும் ஆரம்பித்தல் என்பது நடைமுறைச் சாத்தியமாகாது. முன் மாதிரியாக முதலில் வடமாகாணத்தில் ஒரு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு மாவட்டத்திலும் என யோகா படிப்பித்தல் ஆரம்பிக்க வடக்கு கிழக்கு மாகாண சபைகள் சிந்தித்து செயலாற்ற முன்வரவேண்டும்.