இரசாயணப் பிரயோகமில்லாத காய்கறி வகைகளை சந்தையில் எவ்வாறு தெரிவுசெய்து வாங்குவது?

இரசாயன தெளிப்பான்கள் பாவிக்கப்படாத அல்லது மிகவும் குறைந்த அளவு மட்டும் பாவிக்கப்படக்கூடியதான காய்கறி வகைகளை தெரிவு செய்து வாங்கி சமையலுக்கு பயன்படுத்துதல் தொற்றா நோய் வரும் என்ற பயத்தை ஓரளவு போக்கிவிடும்.
சந்தையில் கீழே குறிப்பிடப்படும் இரசாயனம் செறியாத பொருட்களை வாங்கிச் சமைக்கலாம் என சிபாரிசு செய்யப்படுகின்றது.
காய்கறி வகை: பூசணிக்காய் நீத்துப்பூசணிக்காய் சுரக்காய் வாழைக்காய் பால் அவரை சிறகு அவரை வாள் அவரை பீர்க்கங்காய் சுண்டங்காய் வட்டுக்கத்தரி முருக்கங்காய் கெக்கரிக்காய் கராம்புக் கத்தரி
கிழங்கு வகை : மரவள்ளி கருணைகிழங்கு தாமரைகிழங்கு மோதகவள்ளி வத்தாளைக் கிழங்கு
பருப்பு வகை : மைசூர்பருப்பு துவரம்பருப்பு கொண்டல் கடலை சோயா கௌபி பாசிப்பருப்பு
அவதானமாக பார்த்து கவனமெடுக்க வேண்டிய காய்கறி வகைகள்:
குறைந்த அளவு இரசாயன தெளிப்பான்கள் பாவிக்கும் காய்கறி வகைகள்:
உருளைக்கிழங்கு கரட்கிழங்கு பீட்றூட்கிழங்கு ரடிஸ்கிழங்கு நோக்கோல்

கூடுதலாக இரசாயன தெளிப்பான்கள் பாவிக்கும் காய்கறி வகைகள்:
கத்தரிக்காய் பாவைக்காய் தக்காளிப்பழம் வெண்டிக்காய் புடலங்காய் கோவா லீக்ஸ் போஞ்சி முளைக்கீரை

( ஆ……..ர் )