பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல்

செல்வி. க. கனிமொழி  B.A. ( Sociology )

Dept. of  Sociology,  University of Jaffna

சமுகக் கட்டமைப்பினுள் கட்புலனாகாத நிலையில் மரபுத் தொடர்ச்சியாக பெண்களுக்கெதிரான வன்முறை அணைத்து சமுகக் குழுக்களிலும் இயங்கி வருவதனை உணர்கின்றோம். “ஆண்கள் பெண்கள் ஆகியோருக்கிடையே உள்ள தொடர்புறவுகளில் வரலாற்று ரீதியாக காணப்படும் சமமற்ற அதிகார சக்தியின் வெளிப்பாடே பெண்களுக்கு இழைக்கப்படும் குடும்ப வன்செயலாகும்.” – ( பெண்களுக்கு எதிரான குடும்ப வன்செயல் ஒழிப்பு பற்றிய ஜ. நா. பிரகடனம் 1993 )
பெண்களுக்கு எதிராக இடம் பெறுகின்ற வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக பின்வரும் நடவடிக்ககைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

• பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளல்
• தனிமையற்ற நிலையினை உணரச்செய்தல்
• பிரச்சினையிலிருந்து மீண்டு வர உதவுதல்
• பெண்களது பிரச்சினைகளை அவதானமாக செவிமடுத்தல்
• அவசியமான சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல்
• சட்ட உதவி மற்றும் சமுகப்பாதுகாப்பு ஏற்படுத்தல்
• பொது வாழ்வில் இணைத்துக் கொள்ளல்
• ஆரோக்கியமான பொழுது போக்கினையும் வாழும் சூழலையும் மாற்றி அமைத்தல்.
• பால்நிலை சமத்துவம் குறித்த விழிப்புணர்வு
• குற்றம் இழைப்போர் மீது கடுமையான தண்டனை
• காரியாலயங்கனில் விN~ட கொள்கைத்திட்டத்தினை ஆக்கல்
• தொடர்பு சாதனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தல்
• நடைமுறைச் சட்டங்கள் சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் என்பவற்றை பலப்படுத்தல்
• சமுகத்திலுள்ள சிவில் அமைப்புக்கன் ஏனைய பெண்கள் அமைப்புக்களை பலப்படுத்தல்
• சுய தொழிற் பயிற்சி மூலம் புணர்வாழ்வு அளித்தல்
• நலன்களைப் பேணலும் மேம்படுத்தலும்
• மகளீர் உதவிக் குழுக்களை அமைத்தல்

 

எனவே இன்றைய நாட்களில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்திப் பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  பெண் என்பவள் வெறும் போகப் பொருள் என்ற நிலையை மாற்றி அவர்களுக்கு மதிப்பளித்து சாதாரண மனிதருக்கு உரிய  உரிமையை கொடுக்க வேண்டும். பெண்களால்  மட்டும் அவர்களது உரிமையை வென்றெடுக்க முடியாது.  ஆண்களும்  இதற்குத் துணையாக இருந்து பெண்களுக்கான மதிப்பினை வழங்க ஒன்றுகூட வேண்டும். ஆண்களின் மனதில் பெண்கள் பற்றிய மனப்பதிவில் மாற்றம் ஏற்பட வேண்டும்.  இதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.