ஒற்றையாட்சியில் அதி தீவிரம் ஏன்?

 

அரசியலில்………… எமது பார்வை

தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒற்றையாட்சி அமைப்பில் அதி தீவிரம் காட்டுவது ஏன் ?
சம~;டி என்பது அதிகாரப் பகிர்வுக்கு மேல் அது பிரிவினையை உருவாக்கும் என்றும் நாடு துண்டாடப்படும் என்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூறுவது உள்ளுணர்வாக உண்மை நிலைமையை அவர்கள் அறிந்திராமல் அல்ல. அது தங்களுக்கு வாக்களிக்கும் மக்களை குழப்ப நிலையில் வைத்துக்கொண்டு தங்களது சுயநல அரசியல் இலாபங்களை அடைவதற்கேயாகும். 2000ம். ஆண்டு சந்திரிக்கா அரசினால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த உத்தேச அரசியலமைப்பு வரைவில் ஒற்றையாட்சிக்கு மாற்றீடாக ‘ பிராந்தியங்களின் இணைப்பு ’ ( Union of Regions ) என்ற பதத்தை ஏன் பிரிவினையை ஏற்படுத்தும் வரைவு என சுதந்திரக் கட்சியினர் அன்று எதிர்க்கவில்லை? 2004ம் ஆண்டு ரணில் அரசு ஒஸ்லோவில் நடந்த விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையின் போது உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான அதிகாரப் பகிர்வு பற்றி பேசி ஒரு அரசியல் தீர்வை எட்டலாம் என தெரித்த போது ஜக்கிய தேசியக் கட்சியினர் அதனை பிரிவினை அம்சம் கொண்டது என ஏன் அன்று ஒதுக்கிவிடவில்லை.

புலிகளின் அழுத்தம் இருந்த போது ஒரு நிலைப்பாடும் புலிகளை தோற்கடித்த பின்னாரான நிலைமையில் வேறு தன்மையிலும் அரசியல் பேசுவது தென்னிலங்கை அரசியல்வாதிகள் இன்னமும் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை என்றே ஜயம் தோன்றுகின்றது. தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒற்றை ஆட்சியில் விடாப்பிடியாக நிற்பது அதிகாரங்கள் பகிரப்படாது தடுத்து அவற்றை மத்தியில் வைத்திருப்பதற்காகவே ஒழிய வேறு எக்காரணத்திற்காகவும் அல்ல. மத்தியில் பல அமைச்சர்கள் அதிகார துஸ்பிரயோகம் செய்யக்கூடியதான நிர்வாகம் : இனவாதம் பேசக்கூடியதான விதத்தில் சபையில் சிறுபான்மையினரின் பிரசன்னம் : இலஞ்சம் ஊழலில் ஈடுபடுவற்கான வாய்ப்புக்கள் என்பதற்கு ஒற்றையாட்சி முறைமை சாதகமாக காணப்படுவதினாலேயாகும்.

அதிகாரம் பகிரப்பட்டு மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டால் மத்தியில் அதிகார துஸ்பிரயோகம் செய்யவும் இலஞ்சம் ஊழல் சொத்துச்சேர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடவும் வாய்ப்பிருக்காது அப்படியானால் அவர்கள் மாகாண சபையில் அரசியல் செய்ய முன்வரவேண்டும். அங்கு சட்டப்படி ஆகக்கூடியது நான்கு அமைச்சர்களே இருக்கலாம். பாராளுமன்;றத்திலோ தற்போது 90 க்கு மேற்பட்ட அமைச்சர்கள் மக்களின் வரிப்பணத்தை ஏப்பமிட்டு வாழ்கின்றார்கள்.

மேலும் அதிகாரம் பகிரப்பட்டு சிறுபான்மையினருக்கு சுயாட்சி அமைந்துவிட்டால் அதன்பின் தேர்தல் காலங்களின் போது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு தங்களின்; மக்களிடையே இனவாதம் பேசி வாக்குகளைச் சேகரிக்கின்ற வரலாற்று வாய்ப்பு இல்லாது ஒழிந்துவிடும் என்ற பயமுமுள்ளது.

அதைவிட சுயாட்சி பெற்ற சிறுபான்மை மக்களின் பிராந்திய அரசுகள் அபிவிருத்தியடைந்து தங்களின் பகுதிகளைவிட முன்னேறிவிடக்கூடும் என்ற பீதியும் ஒரு பக்கம் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்குண்டு.

அதிகாரப் பகிர்வால் மத்தியிலுள்ள அதிகாரங்கள் கைவிட்டு போகுமென்பதால் அதன்பின் மத்திய அரசு வெறும் ஜடமாகவே விளங்க வேண்டியதாயிருக்கும். இக்காரணங்களுக்காகவே தென்னிலங்கை அரசியல் கட்சி அரசியல்வாதிகள் அணைவரும் ஒற்றையாட்சியை இறுகப்பிடித்து சிறுபான்மையினரின் சுயாட்சிக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இரு பிரதான அரசியல் கட்சியிலுள்ள அரசியல்வாதிகளும் அதிகார துஸ்பிரயோகம் இலஞ்சம் ஊழல் சொத்துச் சேர்ப்பு என்ற விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவது பற்றி பல உதாரணங்களை வெளியிடலாம். திறைசேரி பிணைமுறி மோசடி இன்றைய சில அரசு அமைச்சர்களின் ஊழலை வெளிக்காட்டுகின்றது.

நீ என் முதுகைச் சொறி நான் உன் முதுகைச் சொறிகின்றேன் என்கின்ற உள்;ர இணக்கப்பாடுள்ள விதத்தில் மாறி மாறி வரும் அரசுகள் செயற்படுகின்றன. தென்னிலங்கை மக்கள் பிரதிநிதிகளும் தேவைக்கேற்ப இரண்டு கட்சிகளுக்குமிடையே மாறிமாறித் தாவிக்கொள்கின்றார்கள்.

ராஜபக்~ ஆட்சியில் அதிகார துஸ்பிரயோகம் இலஞ்சம் ஊழல் இனத்துவே~ம் மதத்துவே~ம் போதைப் பொருள் வினியோகம் ஆட்கடத்தல் போன்றவை இடம் பெற்றது அவர் கையில் அதியுச்ச அதிகாரம் இருந்தமையினாலும் பெரும்பான்மை இனத்தவர்கள் கொண்ட ஒற்றையாட்சி அரசு என்பதினாலுமே அது சாத்தியப்படக் கூடியதாக அமைந்திருந்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றிய ஆணைக்குழு அமைத்து அறிக்கை வெளியிட்டது எண்ணவாயிற்று! ஜ.நா.சபையின் மனித உரிமை பேரவையின் இலங்கை மீதான அழுத்தங்கள் இல்லாது போயிற்றா! மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் தடையின் காரணமும் மறந்து போயிற்றா! ஜீ.எஸ்.பி. ூ வரிச்சலுகை மீள கிடைக்க விதிக்கப்பட்டுள்ள பல நிபந்தனைகளும் தேவையற்றதாக போயிற்றா!

N~hபித தேரரின் நாடு முன்னேற்றமடைய கட்சியரசியலை விடுத்து தேசிய அரசு அமைத்தல் என்ற சிந்தனையும் மறந்து போயிற்றா! பௌத்த மதத்தின் பிற ஜீவராசிகளின் மேல் அன்பு இரக்கம் செலுத்து என்ற போதனைகளையும் மறந்து போயிற்றா! ஆக காலங் காலமாகத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடைப்பிடிக்கும் ஒற்றையாட்சி என்ற தத்துவம் அவர்களின் சுயநல அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு என்பது மட்டும் தற்போது தெளிவாக விளங்குகின்றது.