அநியாயமான உயிர் அழிவுகளை தடுப்போம்

மூதூர் உடவலவ கம்பளை சம்பவங்கள் துயரமானவை
பிள்ளைகளின் பாதுகாப்பு பெற்றார்களின் பொறுப்பு

மனிதர்கள் தங்களின் சந்ததியினரை இனவிருத்தி செய்தல் என்பது பல எதிர்பார்ப்புக்களுடனான சம்பவமாகும். பிள்ளைப்பேறு என்பதே சகலருக்கும் கிடைக்கக்கூடிய பாக்கியமல்ல. பெற்ற பிள்ளைகளுக்கு உணவூட்டி சிறந்த ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி சிறந்த கல்வியை கற்பிக்க வேண்டும். அவர்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கூடியவாறு பொறுப்புள்ளவர்களாக மாற்றம் பெறும் வரையிலும் அவர்களின் பாதுகாப்புக்கு பெற்றாரே பொறுப்பாகவிருந்து கவனித்து வரவேண்டும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் நடத்தைகள் சினேகிதத் தொடர்புகள் விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றில் பெற்றார்கள் நுட்பமாக அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக நடப்பதை தாய் தந்தையரே அறிவுரைகள் மூலம் நல்வழிப்படுத்துதல் வேண்டும்.

பிள்ளைகள் குளம் ஆறு கடல் போன்றவற்றில் குளிக்கும்போதோ அல்லது வேறு இடங்களில் வேறு விதத்தில் தற்செயலாக மரணித்துவிட்டால் அதற்கு அரசாங்கமோ காவல்துறையினரோ அல்லது அவர்கள் படிக்கும் பள்ளி நிர்வாகமோ முழுப் பொறுப்பையும் ஏற்கமாட்டாது. பிள்ளைகளின் பாதுகாப்புப் பொறுப்பை முழுதாக பெற்றாரே ஏற்க வேண்டும். பிள்ளைகள் வெளியிடங்களுக்கு செல்லும்போது தகுந்த அறிவுரைகளை பெற்றாரே முன்கூட்டி கூறி அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்விதமாக அவர்களின் மேலுள்ள அவதானிப்பு அவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் தன்மையாக இராது அவ்வப்போது அவர்களுடன் கலந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிப் பேசி நல்வழியை அறிவுறுத்தும் செயலாகவும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளும்படியாக அமைத்தலும் பெற்றார்களின் கடப்பாடாகின்றது. இத்தகையப் பயிற்சி அவர்கள் பெற்றாருடன் சரளமாக பேசத் தொடங்கிய சிறு வயதுக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

பெற்றார் பிள்ளைகளுடன் கலந்து பேசுதல் சிறு வயது முதல் தொடர்ச்சியான ஒரு செயற்பாடாக இருக்க வேண்டியது அவசியம். இந்தக் கலந்துரையாடல்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் எல்லாப்பிள்ளைகளும் கூடியிருக்கும்போது கதையோடு கதையாக குறிப்பாக இரவுச் சாப்பாட்டு வேளைகளில் இடம் பெறுவது சாலச் சிறந்த பொருத்தமான நேரமாகும்.

பிள்ளைகளைப் பெற்று பெரும் கனவோடு வளர்த்து வரும் வேளையிலே இவ்வாறான அகால மரணச்சம்பவங்கள் எந்தப் பெற்றோராலும் தாங்கிக் கொள்ள முடியாத பேரிழப்பாகும்.
பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் எங்கே போகின்றார்கள் என்பதெல்லாம் அவர்களால்; பெற்றாருக்கு குறிப்பாக தாய்க்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பது ஒரு பொது விதியாக சகல குடும்பங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம். ஆ……ர்