காணாமல் போனமைக்கான சான்றிதழ்

 

2016ம் ஆண்டின் 16ம் இலக்க இறப்புக்களின் பதிவு ( தற்காலிக ஏற்பாடுகள் )

திருத்தச் சட்டம்

P.Prabakar    M.A.  ( Public  Administration )

Assistant  Registrar  General  –  Northern  Zone ,  Jaffna

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலான மோதலின் விளைவாக அரசியல் அமைதிக்குலைவின் அல்லது குடியியல் குழப்பங்களின் அல்லது வலுக்கட்டாயமான காணாமற் போக்கல்களின் விளைவாக காணாமற்போன ஆட்களைப் பதிவுசெய்தல்.

இலங்கையில் நிகழ்ந்த தேசிய மட்டத்தினாலான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய பயங்கரவாத அல்லது நாசகாரச் செயற்பாட்டின் மூலம் அல்லது குடியமைதிக் குலைவினால் இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புக்களை பதிவுசெய்வதற்கு வழமையாகப் பதிவு செய்யும் பிறப்பு இறப்பு பதிவுசெய்தல் சட்டத்தின் (110 வது அத்தியாயம்) கீழ் பதிவு செய்ய முடியாமையினால் இதனை நிவர்த்தி செய்யும் முகமாக 2010ம். ஆண்டின் 19ம் இலக்க இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் கொண்டுவரப்பட்டு இதன் மூலம் ஒரு வருட காலத்துக்கு மேல் காணாமல் போன நபர்களை இறந்ததாகப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் சில காணாமல் போன நபர்கள் இறந்ததாகப் பதிவு செய்வதற்கு உறுதிப்படுத்தக்கூடிய சாட்சிகள் இன்மையாலும் மற்றும் காணாமல் போன நபரினை இறந்ததாகப் பதிவுசெய்ய உறவினர் விரும்பாமை காரணமாகவும் பலர் இதுவரை இறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் காணாமல் போன நபர்கள் சம்பந்தமாக பதிவுசெய்யப்பட்ட சட்டரீதியான ஆவணங்கள் இன்மையால் அவர்களின் உறவினர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

ஆகையினால்இ வடக்கு மற்றும் கிழக்கு பிதேசங்களில் நிலவிய மோதல்களின் விளைவாக அல்லது அதன் பின்நிகழ்வாக அல்லது அரசியல் அமைதிக்குலைவின் அல்லது குடியியல் குழப்பங்களின் அல்லது வலுக்கட்டாயமான காணாமல் போதல்களின் விளைவாக காணாமல் போனவர்கள் என அறிக்கையிடப்பட்ட ஆட்களினை அல்லது யுத்தச் செயற்பாட்டினால் காணாமல் போனவராக அடையாளம் காணப்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்களையும் காணாமல் போன பொலிஸ் அங்கத்தவர்களையும் பதிவு செய்வதற்கு இயலுமான விதத்தில் 2016ம் ஆண்டின் 16ம் இலக்க இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் காணாமல் போன நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சான்றிதழினைப்  பெற்றுக்கொள்வதற்கு அருகிலுள்ள பிரதேச செயலகங்களில் உரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தி காணாமல் போன நபரின் உறவினரால் காணாமல் போன நபர் இறுதியாக வசித்த அல்லது அவரின் நிரந்தர வதிவிடம் அமைந்துள்ள பிரசேத்தின் பிரதேச செயலருக்கு விண்ணப்ப படிவத்தினை அனுப்பி வைக்க முடியும்.

இச்சான்றிதழ் வழங்கப்பட்ட திகதியிலிருந்து  இரண்டு ஆண்டுகாலம் செல்லுபடியாவதுடன்  தேவை ஏற்படின் மேலும் இரண்டு ஆண்டு காலத்துக்கு நீடித்துக்கொள்ள முடியும். மேலும் இச்சான்றிதழினை சமூக நலத்திட்டங்களுக்கும் காணாமல் போன நபரின் ஆதனங்களையும் சொத்துக்களையும் நீதிமன்ற அனுமதியுடன் முகாமை செய்வதற்கும் அவரின் தங்கிவாழும் பிள்ளைகளின் பாதுகாவலராகவும் செயற்படுவதற்கும் காணாமல் போன நபரின் சொத்துக்கள் சார்பாக அரச நிருவனங்களில் முறையீட செயவதற்கும் மேலும் இது ஓர் அதிகாரமளிக்கப்பட்ட ஆவணமாகவும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

பிற் குறிப்பு
இது பதிவாளர் நாயகத்தினது ஒரு அண்மைக் கால சுற்று நிருபத்தினை கட்டுரையாளரால் சுருக்கமாக்கி வடிக்கப்பெற்றது. பொது மக்களின் அறிவுக்காகவும் அது பற்றி அவர்களின் சிந்தனைக்கேற்ப செயற்படவும்