பெண்ணுரிமை-சட்டங்களிலும் யதார்த்தநிலைமைகளிலும்

கனகநமநாதன் LL.B   (col. Uni)

பெண்ணுரிமைபற்றிகதைக்கும்போதுபலர் பலகருத்துக்களில் அதைஅலசிஅணுகுகின்றார்கள். பெண்கள் பலமற்றவர்கள் மென்மையானவர்கள் உதவிவேண்டிவாழ்கின்றவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள். ஆகையினால் சட்டவாக்கத்தின் மூலம் அவர்களதுஉரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றகருத்துஒருபுறமும் பெண்களுக்குசட்டப்படிசகலஉரிமைகளும் இருக்கின்றனஅதனால் சட்டத்தைஅமுல்படுத்திஅவர்களின் உரிமைகளைபாதுகாக்கசமுதாயம் முன்வரவேண்டும்என்றகருத்து இன்னொருபுறத்திலும் கூறப்படுகின்றது. இவ்விருகருத்துக்கள் சார்ந்தும் தேவையானசெயற்பாடுகளைசெய்யத் தேவைஉள்ளதென்றும் இன்னொருகோணத்தில் பார்ப்பவர்கள்தமதுநிலைப்பாடாகக் கொள்கின்றனர். இவற்றைஆராய்வதிலேயேஉண்மையானபிரச்சினையைஅணுகமுடியும்.
நாகரீகமுள்ளமனிதர்களாகவாழ்ந்துஇரண்டுஆயிரம் ஆண்டுகளைக் கடந்துபதினேழுவருடங்கள் ஆகிவிட்ட இந்தப் புது யுகத்திலும் நாங்கள் தெரிந்தோதெரியாமலோமனிதசமுதாயத்தின் ஒருபகுதியினரைவித்தியாசமாகபிரித்துப் பார்ப்பதையோஓரங்கட்டுவதையோஅழகுப் பொம்மைகளாகக் கருதுவதையோஅடிமைகளாகஎண்ணுவதையோநிறுத்திக் கொள்ளவேண்டும்.
தற்போதையவடமாகாணமுதலமைச்சராகவுள்ளகௌரவவிக்னேஸ்வரன் ஜயா மேன் முறையீட்டுநீதிபதியாகபணியாற்றியபோதுஒருகருத்தரங்கில் பெண்கள் உரிமைபற்றிவிளக்கும்போதுபெண்களின் உரிமைகளும் இந்நாட்டின் சிறுபான்மையினரின் உரிமைகளும் ஒத்ததன்மையினைஉடையனஎனவிளக்கியிருந்தார். அவரின் கருத்துப்படிஉரிமைகள் இருக்கின்றனஆனால் பறிக்கப்பட்டதும் பாவிக்கப்படாதுவிட்டதுமானஉரிமைகள்மீளப் பெறப்பட்டுபழையநிலைக்குகொண்டுவருதலேஉள்ளதேவைப்பாடாகும். உரிமைகள் இருக்கின்றனஅவற்றினைநடைமுறைப்படுத்துவதில் உள்ளகுறைபாடுகளேபிரச்சினையைப் பெரிதாக்கிவிடுகின்றன.
ஆகையால் உரிமைகளைப் பாதுகாப்பதுஎன்பதைவிடசட்டத்தால் கிடைக்கப்பெற்றஉரிமைகளைபலப்படுத்தவேண்டியதும் முன்னேற்றமடையச் செய்யவேண்டியதும் நடைமுறையில் சாத்தியப்படவேண்டும்.
அரசியலமைப்புசட்டத்தின் உறுப்புரை 12(1) : எல்லாஆட்களும் சட்டத்தின் முன் சமம் என்பதோடுசட்டத்தின் சமமானபாதுகாப்புக்குஉரித்துடையவர்கள் எனக் கூறுகின்றது. உறுப்புரை 12(2) :எந்தப் பிரஜையும் அவரது இனம் மதம் மொழிசாதிபால் அரசியல் அபிப்பிராயம் பிறப்பு இடம் போன்றஅடிப்படையில் வித்தியாசம் காணப்படுதலாகாதுஎனக் கூறுகின்றது.உறுப்புரை 12(3) :எந்தஆளும் அவரது இனம் மதம் மொழிசாதிபால் ஆகியவற்றின் அடிப்படையில் ஏதாவதுசத்தியற்றநிலமைக்குஅல்லதுபொறுப்பேற்பதற்குஅல்லதுகட்டுப்பாட்டிற்குஅல்லதுநிபந்தனைக்குஉட்படுத்தமுடியாதுஎனக் கூறுகின்றது.
இந்த மூன்று உப உறுப்புரைகளும் ஆண்களும் பெண்களும் சமஉரிமைஉடையவர்கள் என்பதும் சட்டத்தின் முன் சமமானபாதுகாப்புக்குஉட்பட்டவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. ஆகையால் பெண்களுக்குள்ளஉரிமைகள் அவர்களுக்குரியபாரம்பரியமாகவழிவந்துள்ளஉரிமைகளே. ஆண்களுக்குள்ளஉரிமைகள் போன்றவையே.
சட்டத்தில் உள்ளவைஎவ்விதநோக்கத்தைகொண்டுள்ளனஎன்பதைம் அவ்வாறுசட்டத்தில் உள்ளவைஎவ்வாறுநடைமுறையில் காணப்படுகின்றனஎன்பதைம் சட்டத்திலேயேயுள்ளமுரண்பாட்டையும் விளங்கிக் கொள்ளல்வேண்டும்.
அரசியலமைப்புஉறுப்புரை 12(4) :பெண்களின் குழந்தைகளின் வலதுகுறைந்தஆட்களின் மேம்பாட்டிற்காகவிசேடசட்டஏற்பாடுகளைஅல்லது இரண்டாம் தரசட்டவாக்கங்களைஅல்லதுநிருவாகநடவடிக்கைகளைமேற்கொள்ளுதலைஇந்தஉறுப்புரைதடைசெய்யாதுஎன்றுள்ளது. இந்தஉறுப்புரையில் பெண்களைகுழந்தைகளோடும் அத்துடன் வலதுகுறைந்தவர்களோடும் சமமானவர்களாககாட்டப்பட்டுள்ளதால் முன்னர் பார்த்த மூன்றுஉறுப்புரைகளிலும் ஆணுக்குப் பெண் சமமானவர்கள் என்றநிலைப்பாட்டில் முரண்பாடு இருப்பதால் இது சட்டத்திலுள்ளகுறைபாடாகும்.
அரசியலமைப்பிலுள்ளஏற்பாடுகளைவிடபெண்களுக்கெதிரானபாரபட்சங்களைஒழிப்பதுசம்பந்தமாகசர்வதேசஒப்பந்தங்களும் பிரகடனங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஊநுனுயுறு CEDAW  (Convention on the elimination  of all forms of discrimination  against women)  இந்தசர்வதேசஒப்பந்தம் இலங்கைஅரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுகையெழுத்திடப்பட்டஒன்றாகும். The Declaration  on elimination  of  violence  against  women என்றபிரகடனமும் சர்வதேசரீதியில் பெண்களின் பிரச்சினையைமுன்னெடுத்தமுயற்சியாகும். இவையெல்லாம் காலம்காலமாகசமுதாயத்தினால் இரண்டாம்தரநிலைமைக்குதள்ளப்பட்டிருந்தபெண்களின் நிலைமையைமுன்னேற்றமடையச் செய்வதற்கானமுயற்சிகளாகும்.
பெண்கள் சமுதாயம் பொருளாதாரஅபிவிருத்தியிலும் சமூககலாச்சாரமுன்னேற்றத்திலும் பங்காளிகளாகஆண்களுக்குசரிநிகரானமுறையில் ஊக்கமுடனும் சுறுசுறுப்புடனும் செயற்படக்கூடியதாகமாற்றமடைவதொன்றேபயனைத்தரக்கூடியது. இந்நிலைமைதற்போதுபெருமளவில் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வீட்டுக்குள்ளேநான்குசுவர்களுக்குள் இடம்பெரும் ஆணாதிக்கஆட்டங்களைஅடக்கஆக்கப்பட்டசட்டங்களைநாடவேண்டியதில் தவறில்லை. அவைபற்றியசமுதாயவிழிப்புணர்வைதூண்டும் விதத்திலானசெயற்பாடுகளைபெண்கள் அமைப்புக்கள் முன்னெடுக்கவேண்டும