மகப்பேற்றுக் காலஉபாதைகள்

சித்தவைத்தியர் சக்திசுப்பிரமணி

வயிற்றில் குழந்தைஉண்டாகியஆரம்பத்தில் காலைவேளையில் மயக்கம் காணப்படும்,பசியின்மை இருக்கும்,ஏதாவதுசாப்பிட்டால் மயக்கம் அல்லதுவாந்திவருவதுபோன்றநிலைமை இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைவளரவளர (யுநெஅயை) என்ற இரத்தசோகைக்குஆளாகுவார்கள் அத்துடன் கர்ப்பிணிப்பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முக்கியமாக.காலையில் ஏற்படும் குமட்டல்,படபடப்பு,சோர்வு,மயக்கம்,பசியின்மை, இரத்தஅழுத்தம் (டீP) கூடக்கூடும்.
இவற்றைசமநிலைப்படுத்தகீழ்காணும் விதத்தில் தயாரிக்கப்படும் தேனீரைபருகிவரகுமட்டல், இரத்தஅழுத்தம் என்பனகட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.
தேவையானபொருட்கள்
கறிவேப்பிலை :- 2 நெட்டு
சீரகம் :- ½ டீஸ் பூன்;
மிளகுஅரைத்தது :- 10
கொத்தமல்லி :- ½ டீஸ் பூன்
பனங்கர்க்கண்டு :- சிறிதளவு

இவற்றை இடித்துபொடியாக்கிநீரிலிட்டுஅதைகொதிக்கவைத்துதேனீராக்கிஒருடம்ளர் காலையில் வெறுவயிற்றில் குடிக்கவேண்டும்.
இவ்வாறானபிரச்சினைகள் ஆரம்பம் தொட்டு மூன்றுமாதங்களுக்கு இருக்கும் சிலருக்கு இது குழந்தைப்பேறுநடைபெறும் வரையிலும் இருக்கலாம்.
இவ்வாறானவர்கள் இவ்விதமாகபருகிவந்தால் ஜீரணஉறுப்புக்களை தூண்டிபசியேற்படவழிவகுக்கும்.
இப்பிரச்சனைக்குமற்றுமொருமருந்து
சீரகம் :- ஒருநெகுடி (ஒருநெகுடிஎன்பது 3 விரல்களைஇணைத்துஒருதடைவைஎடுக்கும் அளவாகும்)
சமையல் உப்பு :- சிறிதளவு
நெய் :- சிறிதளவு
இவற்றைஎடுத்துகுழைத்துஉருண்டையாக்கிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் குமட்டல் இல்லாதுசெறிமானம் உண்டாகும்.
வயிற்றுவலிக்கு
அடுத்துவயிற்றிலுள்ளகுழந்தைநகரும் போதும் குழந்தையின் நிறைஅதிகரிக்கும் போதும் உண்டாகும் வயிற்றுவலியைபோக்குவதற்குரியவெளிப்பூச்சுமருந்துதயாரிப்பதுஎப்படிஎனபார்ப்போம் அதற்குதேவையானபொருட்கள்.
விளக்கெண்ணை :- ஒரு டீஸ் புன்
வெந்தயம் :-  20 – 30 பருக்கைகள்
இரண்டையும் எடுத்துசட்டியில் போட்டுவதக்கியபின் வதங்கிவந்தவெந்தையத்தைநீக்கிவிட்டுஎண்ணையைவயிற்றில் தடவிவரவயிற்றுவலிமறைவதுடன் வயிற்றிலுள்ளவாய்வையும் வெளியேற்றும்.

நன்றி–சன் டிவி