தமிழ் தலைவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக்கொள்வதுதவிர்க்கப்படவேண்டும்

கனியாதிருக்கும் இனப்பிரச்சினைக்குகாரணம் காலங்காலமாய் தொடர்ந்துகொண்டுவரும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையேயுள்ளமோதல்களும் உட்கட்சிஅரசியல் சீர்கேடுகளுமேயாகும். 1940 களில்தமிழ் காங்கிரஸ் என்றபெயரில் ஒரேஒருகட்சியாகவிருந்ததுபின் 1949ல் தமிழரசுக்கட்சியென இரண்டாகியநாட்தொட்டுஇழுபறிகள்ஆரம்பித்தன. அன்றுஆரம்பித்தஅரசியல் முரண்பாடு இன்றுவரைதொடர்கின்றது. மூன்றுதலைமுறைகள்கண்டும்; கட்சிகளின் பெயர்களில் சிறியமாற்றங்கள்ஏற்பட்டிருப்பதைதவிரஅடிப்படையில் இன்றும் தமிழ் காங்கிரஸ் – தமிழரசுக்கட்சிக்கிடையிலானமுரண்பாடுகள்நீள்கின்றது.
1947ம் ஆண்டுதேர்தலில் தமிழ் காங்கிரஸ் 07 தொகுதியில் வெற்றிபெற்றிருந்தது. அன்றுஅத்தேர்தலில்எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காங்கேசன்துறையிலும் சி. வன்னியசிங்கம் கோப்பாயிலும் தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்துதெரிவானார்கள்.
ஜி.ஜி.பொன்னம்பலம் அன்றையஅரசாங்கத்துடன் சேர்ந்துஅமைச்சரானதாலும் அதேஅரசினால்மலையகமக்களின் வாக்குரிமைபறிக்கப்பட்டதினாலும் தமிழரசுக் கட்சிஉதயமாகியது. அத்துடன் கட்சிமோதல்கள்ஆரம்பமானதற்குஅமையப்பெற்றஅடிப்படைக் காரணமுமானது. தமிழ்க் காங்கிரஸிலிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம்சி. வன்னியசிங்கம் டாக்டர். ஈ.எம்.வி. நாகநாதன் ஆகியவர்களேதமிழரசுக்கட்சியைஆரம்பித்ததற்குமுக்கியமானவர்கள். தமிழரசுக்கட்சிசமஸ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வுத் தீர்வுஎன்றநோக்கத்தில் பயணிக்கமுடிவெடுத்தது. 1952ம்.ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியால் இரண்டுஆசனங்களையேவெற்றிகொள்ளமுடிந்தது.
ஆனாலும் 1956 தொடக்கம்(1983 தொடக்கம் 2000 வரைதவிர்த்து)இன்றுவரைதமிழரசுக் கட்சிதனித்தும் கூட்டணிசேர்ந்தும் தமிழ் மக்களின் செல்வாக்கைதொடர்ந்துபெற்றுவருகின்றஒருகட்சியாகவிளங்குகின்றது. ஜனாப.; அஸ்ரப் 1985ல். முஸ்லீம் காங்கிரசைஆரம்பிக்கமுன்னர் முஸ்லீம் தலைவர்களும் தமிழரசுக் கட்சியில் இணைந்துபோட்டியிட்டுமக்கள் பிரதிநிதிகளாகதெரிவாகியிருந்தார்கள் என்பதுமறக்கப்பட்டஉண்மை.கல்முனையில் எம். எஸ்.காரியப்பர் பொத்துவிலில் எம். எம். முஸ்தபாவும் மூதூரில் எம் ஈ. ஏச்.முகம்மதுஅலியும் தமிழரசுகட்சியின்பிரதிநிதிகளாக இருந்தவர்கள்.
ஆனாலும்.அமிர்தலிங்கத்திற்குஎதிரானரையல் அற் பார் (வுசயடை யுவ டீயச)வழக்கில்அமிர்தலிங்கம் சார்பாகஜி.ஜி.பொன்னம்பலம் ஞ.ஊ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஞ.ஊ. எம். திருச்செல்வம்ஞ.ஊ.எனஅக்கால இராணிசட்டத்தரணிகள் ஒன்றிணைந்துவாதாடியதுதமிழருக்குஒருபெருமைக்குரியவரலாற்றுநினைவுநிகழ்வாகஎன்றென்றும் விளங்கும்.
இருந்தாலும் ஒருகட்டத்தில் போட்டிக் கட்சிகள் இணைந்தன. 1972ல் தமிழர் ஐக்கியவிடுதலைக் கூட்டணியாகியது. ஜி.ஜி. எஸ்.ஜே.வி. தொண்டமான் கல்குடாதேவநாயகம் ஆகியோரின் இணைப்பில் இது சாத்தியமானது1994லில் வட்டுக்கோட்டைதீர்;மானம் இயற்றப்பட்டது. தமிழரசுக்கட்சியின் சமஷ்டி கோரிக்கையைஉதறித்தள்ளிதமிழ் ஈழம் என்பதைதமிழர் ஐக்கியமுன்னணியின் இலட்சியமாக்கப்பட்டது. ஆனால் அதன் பின்பும் தலைவர்கள் தனித்துவமாகவேசெயற்பட்டஆரம்பித்தார்கள். ஜி.ஜி.. எஸ்.ஜே.வி. ஆகியோரின் அரசியல் வாழ்க்கைஅஸ்தமனமாகியது.தமிழர் ஐக்கியவிடுதலைமுண்ணனியாகபெயர் மாற்றம் செய்தபின் தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தநால்வர் தமிழரசுக் கட்சியினருடன் இணைந்து1977ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றார்கள். வட்டுக்கோட்டையில் ரி. திருநாவுக்கரசுநல்லூரில் எம். சிவசிதம்பரம் கிளிநொச்சியில் வி. ஆனந்தசங்கரிவவுனியாவில் தா. சிவசிதம்பரம் ஆகியோர் வென்றுஓரளவுஒற்றுமையைஏற்படுத்திக்கொண்டவர்களாகவிளங்கினார்கள்.அத்தேர்தலில் ஜி.ஜி. யின் மகன் குமார் பொன்னம்பலம் தனக்குயாழ்ப்பாணம் தொகுதிதரப்படவேண்டும் இல்லாவிடில் தான் இந்தஒற்றுமைக்கூட்டணியில் சேரப்போவதல்லைஎனஒதுங்கிவிட்டார்.பாராளுமன்றம் சென்றுதமிழ் மக்கள் சார்பானதனதுநிலைப்பாட்டினைஎடுத்துஉரைப்பதிலாஅல்லதுதந்தையின் அதேதொகுதியிலிருந்துதான் தெரிவாகவேண்டும் என்பதிலாஅவரின் அரசியல் உணர்வுதங்கியிருந்ததுஎன்பதுபரிசீலணைக்குரியது. சிறிலங்காசுதந்திரக் கட்சியின் கூட்டணிக்கு 08 ஆசனங்களேகிடைத்திருந்தது. அதனால் 18தொகுதிகளில் வெற்றியீட்டியதமிழர் ஐக்கியவிடுதலைமுன்ணனியின்தலைவராகவிளங்கியஅப்பாபிள்ளைஅமிர்தலிங்கம்எதிர்க்கட்சித் தலைவரானார்.
அதன்பின் காலங்கள் மாறின. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பக்கட்டம் அங்கும் இங்குமென்றுதுப்பாக்கிகள் வெடித்தன. அரசைஆதரித்துவந்ததமிழர்கள் தமிழ்த் தலைவர்கள் மற்றும் துப்பறியும் பொலிசார் ஆகியோர்கள்வேட்டையாடப்பட்டனர். தமிழ் எம்.பி.க்கள் பிரிவினையைஏற்றுச் செயற்படமாட்டோம் என்றதோரணையில் சத்தியப் பிரமாணம் செய்துதான் பாராளுமன்றத்திற்குள் செல்லலாம் எனஅரசியல் அமைப்பில் 6வது திருத்தச்சட்டம் நிறைவேற்றியதால் அவர்கள் சத்தியப்பிரமானம் செய்யாதுஇந்தியாசென்றனர். 1983டில் யுத்தம் பெருமளவில் வலுப்பெற்றது. தமிழரசுக்கட்சிதமிழ் காங்கிரஸ் என்றபெயர்களேமறக்கப்பட்டநிலைமை. ஈரோஸ் டெலோஈபிஆர்எல்எப் புளொட் ஈஎன்டிஎல்எப் ஈபிடிபிஎன்பனவையேகட்சிகளாகமாற்றமடைந்தன. விடுதலைபுலிகள் போர் முழக்கத்தில் மூழ்கியிருந்தகாலம். புலிகளின் கடைக்கண் ஈரோஸ் பக்கமிருந்தது. 83ம்.ஆண்டுத் தேர்தலில் புலிகளின் கடைக்கண் வீச்சினால் 11 பாராளுமன்றபிரதிநிதிகளைஈரோஸ் வென்றது. புலிகள் எதைச் செய்யச் சொன்னார்களோஅதைஅவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் 1988ம். ஆண்டுத் தேர்தல் காலத்தில் இந்தியப்படையினரின் கை ஓங்கியிருந்தது. ஈரோஸ் புலிகளுடன்காட்டுக்குள் இருந்துகொண்டுஇரண்டுதமிழ் கட்சிகளையும் போட்டியிடாதுதடுத்தமையினால் தமிழரசுக்கட்சியினரானஅமிர்தலிங்கம்மாவைசேனாதிராஜா ஆகியோர் முறையேமட்டக்களப்பிலும் அம்பாறையிலும் போட்டியிட்டுதோல்வியடைந்தார்கள். தமிழ் காங்கிரஸ் எங்குமேபோட்டியிடவில்லை. இயக்கங்களானடெலோஈபிஆர்எல்எப் கட்சிகள் வடகிழக்கில் அமோகவெற்றிபெற்றன. வட-கிழக்குமாகாணசபையையும் அவர்கள் கைப்பற்றினார்கள். காட்டுக்குள் புலிகள் இந்தியப் படைகளால் ஒதுக்கப்பட்டார்கள். வட-கிழக்குநாட்டிலோடெலோஈபிஆர்எல்எப் ஈஎன்டிஎல்எப்கூட்டுஇந்தியன் ஆமிபலத்தோடுஅராஜக ஆட்சிஎன்றுகாலம் ஓடியது.
ஆனால் 1994ம்.ஆண்டுத் தேர்தலில்; எவரும் தேர்தலில் பங்குபற்றக் கூடாதுஎனபுலிகள்கடும் எச்சரிக்கைசெய்ததால் எல்லாதொகுதிகளிலும் அரசஆதரவோடுஈ.பி.டி.பி. கட்சிஒவ்வொருதொகுதியிலும்சிறுசிறுவாக்குகளைப் பெற்றுயாழ்ப்பாணதேர்தல் மாவட்டத்திலேமொத்தம்10இ744 வாக்குகளைப் பெற்று 09பாராளுமன்றஆசனத்தைகைப்பற்றிசந்திரிக்காஆட்சியில் அமைச்சர் பிரதியமைச்சர்களடங்கியமுக்கியகட்சியானது. பொலிப்பாக கூறவேண்டுமானால் 1983ம் ஆண்டிலிருந்து 2001 ஆண்டுவரை இயக்கங்களின் சாம்ராஜ்யமேதமிழ் பிரதேசங்களில் நடைபெற்றுவந்தன.
ஆதலினால் ஈபிடிபிகட்சியைவளரச்செய்தமைக்குபுலிகளேகாரணமாயிருந்தார்கள். இவ்வாறுஅப்புக்காத்துமார்களும் படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் பதவிவகித்தபாராளுமன்றத்தில் பாமரர்கள் பள்ளிகொண்டிருந்தார்கள்.
1990ரில் ஒருமாற்றம் ஏற்பட்டது.சனாதிபதிபிரேமதாசாவின் கட்டளையால் இந்தியப்படைவெளியேறவட- கிழக்குமாகாண சபை தானாகக்கலைந்தது. சபையைஆண்டகட்சிகள் அங்கத்தவர்கள் இந்தியப் படைகளோடு இந்தியாசென்றனர். முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இன்றும் இந்தியஅரசின் செலவிலேஅங்கேயேவாழ்ந்துவருகின்றார்.
2001டில் தமிழ் தேசிய கூட்டமைப்புஉருவாக்கப்பட்டபின்னர் தான் தமிழ் கட்சிகள் மெல்லத் தலையெடுக்கத் தளைப்பட்டனர். தமிழரசுக் கட்சிதமிழ் காங்கிரஸ் புதுப்பிக்கப்பட்டுஅரசியலில் காலைப்பதித்தனர். ஆனால் அதற்குள்ளும் இயக்கங்களின் ஊடுருவல்கள் இல்லாமலில்லை. டெலோதமிழரசுவுடனும் புலிகள் தமிழ் காங்கிரசுடனும் இறுக்கம் காண்பிக்கிறார்கள். ஈபிஆர்எல்எப் புளொட் இரண்டுபக்கமும் காலைவைத்திருந்துவசதியைபார்க்கின்றார்கள். தமிழர் பேரவைகட்சியாகமாறாதாமுதல்வர் அதைகட்சியாக்கமாட்டாராஅதைஅவர் வழிநடாத்தமாட்டாராஎன்றுகனவுகண்டுகொண்டிருப்பர்கள் இலவம்காத்தகிளிகளாவார்கள் என்றேமக்கள் முனுமுனுக்கின்றனர்.
இந்நிலையில் மீண்டும் இயக்ககாலம் ஏற்படாதவகையிலும் புத்திஜீவிகளை இறக்கச் செய்யும்காலமும்இல்லாதநிலையில் தமிழ் தலைவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக்கொள்வதுதவிர்க்கப்படவேண்டும்.