சிறுதானியப் பயிர்கள் உற்பத்தியைஊக்குவிப்பதுஏன் ?

சிறுதானியபயிர் உற்பத்தியாளர் சங்கம் விளக்கம்
மாரிமழையுடன் மக்களைசிறுதானியப் பயிர்களைவிளைவிக்கும்படிவேண்டுகோள் விடுத்தோம். அதற்காககாலஎல்லைகளையும் இயற்கை வழி விவசாயத்துடன் அனுசரித்தசெயற்பாட்டையும் கூறியிருந்தோம். இவற்றைஎன்னமுடிவுகளைஎதிர்பார்த்துமுன்வைத்தோம் என்பதுக்கானபதில் இதோ!

1. உணவுபழக்கவழக்கங்களில் மாற்றத்தைஎதிர்பார்த்துஇன்றையசமுதாயமக்கள் மருந்துமாத்திரைஎன்றும் ஆஸ்பத்திரிஎன்றும் அலைந்துகொண்டிருப்பதைஅவதானிக்கலாம். அதன் காரணம் மாச்சத்துசீனிச்சத்து கூடியஉணவுகளைஉண்ணும் உணவுமுறைமைகளில் பழக்கப்பட்டதினால் என்பதும் எவருக்கும் தெரியும். இவற்றில் மிகவும் கெடுதலானஉணவுப் பண்டமாகவிளங்குவதுகோதுமைமாஎன்பதும் சகலருக்கும் தெரிந்தவிடயம். சீனிநோய் கொழுப்புநோய்களுக்கு கூடியபங்களிக்கிறது. வெள்ளைஅரிசிமாவும் கூட அதேநிலைமையைகொடுக்கின்றது. சிவப்புஅரிசிமாவும் சிறந்ததல்ல. அரிசிச் சோறினையும் அதிகமாகஉண்ணுவதால் இவ்வாறானநோய்களுக்குவித்திடுகின்றது. இவற்றிலெல்லாம் மாப்பொருள் சத்து கூடுதலாகஉள்ளதால் இரத்தத்தில் சீனித்தன்மையைஅதிகரித்துநீரழிவுநோயையோஅல்லது இரத்தத்தில் கொழுப்புச் சத்தைஅதிகரித்து இரத்தஅழுத்தம் மாரடைப்புபாரிசவாதம் போன்றநோய்களையோஉருவாகுவதற்குகாரணமாகின்றது. நோயின் தாக்கத்தைகுறைக்கும் நோக்கில் கோதுமைமாவுஅரிசிமாவுஆகியவற்றிற்குமாற்றீடானஉணவுவகையைசிறுதானியப் பயிர்களில் காணக்கூடியதாகவுள்ளது. குறைந்தபட்சம் காலைநேரவேளைஉணவுப் பழக்கத்தையாவதுமாற்றம் காணும் வகையில் உணவுஉற்பத்திதேவைஉணரப்படுகின்றது. உழுத்தம்;தோசை இட்லிவடைபோன்வற்றில் மாச்சத்துகுறைந்துபுரதச்சத்துமேலோங்கியிருக்கும். இதுஇருதயத்திற்குபெலனைக் கொடுக்கும். பயறுகுளிர் காலம் தவிர்ந்த ஏனைய காலத்திற்குசிறந்த புஸ்டியானஉணவாகின்றது. இதேபோன்றேகவ்பீசோயாபோன்றவற்றையும் சிறந்தகாலைஉணவாகபழக்கிக் கொள்ளலாம். கொண்டல் கடலைநாம் இலங்கையில் உற்பத்திசெய்யாவிட்டாலும் காலைஉணவிற்குமிகவும் உகந்தது.

2. வரகுகுரக்கன் உற்பத்தியைஅதிகரிப்பதற்குகுரக்கன் விளைச்சல் மிகவும் குறைவடைந்துள்ளது. இது ஒருசிறந்தஆரோக்கியத்தைகொடுக்கும் உணவுஎன்பதுஎல்லோரும் அறிந்தது. குரக்கன்களிகுரக்கன் பிட்டுகுரக்கன் ரொட்டிஎன்பனகாலைஉணவுக்குஏற்றது. நீரழிவுநோய் வராதுதடுக்கும். வந்தவர்களுக்கும் நோய் அதிகரிக்காதுதணிக்கும். இத்தானியம் சந்தையில் எங்கும் எப்பொழுதும் சாதாரணவிலைக்குவேண்டக்கூடியதாககொண்டுவரப்படவேண்டும். அதேபோன்றுவரகுபற்றிமக்கள் மறந்தநிலைமையேகாணப்படுகின்றது. இதுஉடலுக்குவலிமைகொடுக்கக்கூடியசிறந்தஉணவாகும். வரகுஅரிசிசோறுவரகுஅரிசிகஞ்சிகாலைமட்டுமல்லமதியஉணவாகவும் முன்னர் காலங்களில் பயன்பட்டுவந்ததைமுதியசமுதாயம் இன்றும் நினைவு கூறுவதைஅவதானிக்கலாம். விக்கனமில்லாதஉடலுக்குஆரோக்கியத்தைஅள்ளிவழங்கும் உணவாகும். முன்னையகாலத்தில் இரவில் சமைத்துவைத்துகாலையில் எஞ்சியபழையகறியுடன் பனம் பினாட்டையும் சிறுதுண்டுகளாகபிரித்துபோட்டுகுழையல் உண்பார்கள். கஞ்சிகாச்சிகாலைஉணவானஅருந்தலாம். மதியச் சோற்றில் நாட்டுஅரிசியுடன் சேர்த்துவரகுஅரிசியையும் விரும்பியஅளவில் கலந்துசோறுசமைத்துஉண்ணலாம். இவ்வாறுநல்லசாப்பாடுகளைசாப்பிட்டுசுகதேகியாகவாழ்வதாஅல்லதுவாய்குருசியானகோதுமைசாப்பாடுகளைஉண்டுவருத்தங்களுடன் வாழ்வதிலாவாழ்க்கைசிறக்கும் என்பதைஉற்றுக் கவனிக்கவேண்டும்.

3. சோளம்நிலக்கடலைஎள்ளுஉற்பத்தியையும் அதிகரிப்பதற்காகசோளச்சாப்பாடுஆராக்கியத்துக்குசிறந்தது. சோளன்மாசோளக்குருனல்ஆகியவைமேற்குலகநாடுகளில் சிறந்தகாலைஉணவாகபயன்படுகின்றது. ‘கோன்பிலேக்’எனபலபெயர்களிலுள்ள இந்தச் சோளக்குருனலைஅங்குபசும்பாலுடன் கலந்துஉட்கொண்டுவேலைக்குசெல்கின்றார்கள். நிலக்கடலைசிறந்தபுரதச்சத்துள்ளஉணவாகின்றது. மகாத்மாகாந்திஉண்டுவந்தஉணவுகளில் நிலக்கடலைமுக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. எள்ளும் ஒருஉணவாகஏற்றுக்கொள்ளகூடியசிறந்ததானியம். இளைத்தவனுக்குஎள்ளும் கொழுத்தவளுக்குகொள்ளும் எனபழமொழியுண்டு.உடம்புமெலிந்துகாணப்படுபவருக்குஎள்ளுச் சாப்பாடுகொடுத்துவந்தால் அவர் புஸ்டியானவராகமாறிவிடுவார். சாதத்துடன்நல்லெண்ணைவிட்டு; சாப்பிட்டுவந்தால் நல்லபலனைக் கொடுக்கும்.

4. மண்ணைச் செழுமைப்படுத்துவதற்காக

சிறுதானியப்பயிர்களிலஅனேகமானவைஅவரையினத்தைச் சார்ந்த இனங்களாகும். இவை அறுவடைக்குதயாராகவரும் வேளையில் அவற்றின் வேர்களில் முடிச்சுக்கள் ஏற்பட்டுஅதனால் நிலமண்ணிலேநைதரசன் சத்தைபதியவைக்கின்றது. இச்சத்து இதனையடுத்தபோகபயிர்ச் செய்கைக்குநல்லஅடிக்கட்டுப் பசளையாகின்றது. வருடம் ஒருமுறையாவதுஒவ்வொருதோட்டமண்ணிலும் இப்பயிர் செய்கைஉறுதியாக்கப்பட்டால் மண் தன்மைகெடாதுபாதுகாக்கப்படும்.

5. மாரிமழையின்நீரைப் பயன்படுத்துவதற்காக

இவ்அவரையினப் பயிர்கள் மாரிமழைஆரம்பத்தோடுஅதாவதுஐப்பசியில் பயிரிடப்படாமல் சிறிதுகாலம் தாமதித்துகார்த்திகையில் விதைக்கமுடிந்தால் அறுவடைகாலத்தில் நீரில் பயிர் அமிழ்ந்துபலனற்றுப் போகவிடாதுதடுக்கலாம். தைக்கடைசியில் அல்லதுமாசியில் அறுவடைக்குஏற்றாற்போலவிதைப்பு இருக்கவேண்டும். அறுவடைகாலத்தில் நீர் தேவைப்படாது. நிலத்தில் இருக்கும் ஈரத்திலும் பணியிலும் பயிர் விளைந்துவிடும்.
கனகநமநாதன்
தலைவர் சிறுதானியப்பயிர் உற்பத்தியாளர் சங்கம்