இலங்கையிலுள்ளது ஜனநாயகமா ? மதவாதமா ?

அரசியலமைப்பில் இலங்கைஒருபௌத்தநாடுஎன்றிருப்பதும் பௌத்தத்திற்குமுக்கியத்துவம் எனஇருப்பதும் ஒரேவெளிப்பாடுதான்.
மதத்திற்குமுக்கியத்துவம் என்பது ஜனநாயகசெயற்பாட்டைமுடக்குவதுஎன்பதாகும்
ஜனநாயகம் பாகுபாடற்றதுஏற்றத்தாழ்வற்றதுசமத்துவமானதுஎவருக்கும் ஒரேநீதிஒரேவாய்ப்புஒரேஉரிமைஎன்பதைநாட்டின் பெரும்பான்மையானவர்களின் மதத்துக்கானமுன்னுரிமைஎன்றஅரசியல் அமைப்புஅந்தஸ்தால் ஜனநாயகம் தகர்க்கப்படுகின்றது. பெரும்பான்மையினரின் உணர்வுதேவைப்பாடுஅபிலாஷை என கூறும் அக்கணமே ஜனநாயகம் உண்மையானதுவல்லஎண்ணிக்கையைபொறுத்தேயானதுஎனபொருள்படுகின்றது. சிறுபான்மையினருக்கும் ஒரேநீதிவாய்ப்புஉரிமைஎன்பனமழுங்கடைக்கப்படுகின்றன.
மதத்திற்கானமுன்னுரிமைஎன்பதுஒருசிலபௌத்தமக்களிடையேயும் அமைப்புகளிடையும்மதவாதஉணர்வுகளைமேலோங்கச்; செய்துஅதனால் பலகுற்றவியல் குற்றங்களைபுரிவதற்கும் மனிதஉரிமைமீறல்களுக்கும் காரணமாகஅமைந்துவருகின்றது.
பௌத்தர்களுக்குஒருபுராணமாகஅவர்களால் மதிக்கப்படும் ‘மகாவம்சம்’எழுதப்பட்டகாலத்திலிருந்தே (கி.பி. 7ம். நூற்றண்டுஎனஎண்ணப்படுகின்றது) பௌத்தமதம் முன்னிலைப்படுத்தப்பட்டுவந்திருக்கின்றது. இதன் காரணமாகவேநாடுவெளிநாட்டவர்களின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தபோதும்நாட்டிற்குபலபின்னடைவுகள் ஏற்பட்டுவந்திருந்தன. அதன் தாக்கமே இன்றும் பௌத்தம் ஒருபேரினவாதசக்தியாகதென்னிலங்கைஅரசியல்வாதிகளால் உண்மையினைவெளியிடமுடியாதவாறுகண்மூடித்தனமாகஆதரிக்கவேண்டியநிர்ப்பந்தத்த்pல் இருக்கின்றார்கள் எனலாம். நாட்டில் தீர்க்கப்படவேண்டிய இனப்பிரச்சினைதீர்க்கப்படாதுநீண்டகாலத்திற்கு இழுத்தடிக்கப்படுவதற்கு இந்தமதவாதக் கொள்கையேஅடிப்படையிலுள்ளது. பண்டா–செல்வாஒப்பந்தம் டட்லி–செல்வாஒப்பந்தம் அமுலாக்கமுடியாதுபோனதற்குமதவாதமுக்கியத்துவமேகாரணமாகசெயற்பட்டது. வடகிழக்கில் பலஅத்துமீறியகுடியேற்றங்களைஉருவாக்கவும் மதம் முன்னின்றுசெயற்பட்டது. பலபுத்தர் சிலைகளைபௌத்தர்களில்லாததமிழர் முஸ்லீம் வாழும் பிரதேசங்களில் நடுவதற்கும் இதேமதவாதமுன்னெடுப்புகாரணமானது. மாத்தளைதிகவாப்பியாவேறும் பலஇடங்களில் முஸ்லீம் பள்ளிவாசல்களைஇடித்துஅழிக்கமுற்பட்டதும் இந்தமதமுன்னுரிமைச் சிந்தனையே.இப்பொழுதுஅந்தமதவாதசிந்தனைறோஹிஞ்யாஅகதிகளையும் விட்டுவைக்கவில்லை. சர்வதேசஅரங்கிலேயேஅகதிகளுக்கெதிரானமனிதஉரிமைமீறல் களங்கத்தினை இலங்கைக்குஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஜனநாயகம் மிளிரவேண்டுமானால் அரசியலமைப்பில் மதச்சார்பற்றதுஎனப் பொறிக்கப்படவேண்டும்.