சுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்

அரசியலமைப்பின் மூலம் நியமிக்கப்பட்ட
சுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்?
(சட்டத்தரணி கனக நமநாதன் )

ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சுயாதீன அதிகாரிகள் நியமனமும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனமும் செயற்பாடுடையதாக விளங்குகின்றது. அரசியல் அமைப்பிலேயே சில முக்கிய அதிகாரிகளை சனாதிபதி நியமனம் செய்யவும் சம்பளம் மற்றும் குறித்த பதவிக்கு தேவையான விதிக்கப்பட்டவற்றை உறுப்புரையில் காணலாம். குறிப்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் கணக்காய்வாளர் தலைமையதிபதி சட்டமா அதிபர் தேர்தல் ஆணையாளர் தலைமை நீதிபதி போன்ற சுயாதீனமாக இயங்கும் உயர் அதிகாரிகளின் நியமனங்கள் அரசியலமைப்பில் விதைந்துரைக்கப்பட்டவாறு சனாதிபதியினால் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆனால் அண்மைக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பின்னர் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் சிபாரிசினைப் பெற்றே சனாதிபதி நியமனம் செய்யகூடியதாக மாற்றம் பெற்றுள்ளது. சில அதிகாரிகளின் நியமனஙகள்; தவிர வேறு சில அதிகாரிகளின் தலைமையில் ஒரு குழுவும் அந்த குழு அங்கத்தினர்களை சபாநாயகர் பிரதமர் எதிர்க்கட்சி தலைவர் வேறும் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் சேர்ந்து சுயாதீன ஆணைக்குழுவாக நியமிக்கப்பார்கள்.

சட்டமா அதிபராக அந்த திணைக்களத்தின் மூத்த சட்டவாதியாக உள்ளவரையே சனாதிபதியால் தெரிவு செய்வது வழக்கமானது. அவருக்கு கீழே சொலிசிற்றர் ஜெனரல் உதவியாளராக இருப்பார். சட்டமா அதிபரின் தொழிற்பாடு சனாதிபதிக்கும் பிரதமருக்கும் சட்ட ஆலோசனை வழங்குவதாகும். அதனுடன் குற்றவியல் வழக்குகளை மேல் நீதிமன்றில் வழக்கிடத் தேவையான குற்றப்பத்திரிக்கை; வழக்குப் பிராது ஆகியவற்றை தயாரித்தலும் மேல் நீதிமன்றில் வழக்கினை நடத்துவதுமாகும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைப்பதும் அந்த விடயம் அரசியல் தiயீடுகளின்றி சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றதும் ஒரு சிறந்த சனநாயகத்தை செயலுருவாக்கும் விடயமாகும். தேர்தல் ஆணைக்குழு எல்லை நிர்ணய ஆணைக்குழு தேசிய போலீஸ் ஆணைக்குழு மனித உரிமை ஆணைக்குழு பல்கலக்கழக வழங்கல் ஆணைக்குழு கணக்காய்வாளர் சேவை ஆணைக்குழு நிதி ஆணைக்குழு பகிரங்க சேவை ஆணைக்குழு நீதிச் சேவை ஆணைக்குழு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்கள் சனநாயக அடிப்படையில் எவரின் தலையீடுமின்றி சுயாதீனமாக இயங்கவே நோக்கம் கொண்டவையாகும்.
இவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதற்கான அதிகாரத்தை கொடுத்தும் எவரினதும் தலையிடாத் தன்மையை நிச்சயப்படுத்தியும் அரசியலமைப்பினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அல்லது ஆணைக்குழுக்கள் நாட்டின் பிரசைகளின் தேவைகளை அல்லது பிரச்சினைகளை ஊன்றி அலசி ஆராய்ந்து முடிவு எடுக்காது நேர்மையற்ற சனநாயகமற்ற தீர்மாணத்தை மேற்கொள்ளும் போது அதனை எவ்வாறு சரிசெய்வது என்பதில் தெளிவற்ற தன்மையையே காணப்படு;கின்றது.

வேலியே பயிரை மேய்வதற்கீடான சனநாயகத்தை கட்டிப் பாதுகாக்க வேண்டிய ஒருவர் சனநாயகததிற்கு முரண்பட்ட வகையில் செயற்பட்டால் எவ்வாறு நாடு முன்னேறும் என விசனம் தெரிவிக்கப்படுகின்றது. சனாதிபதியும் கூட தலையிட முடியாதபோது அரசியலமைப்பினால் நியமிக்கப்பட்ட அந்த அதிகாரி தனது முடிவை மாற்றியமைக்க என்ன வழி என்பதில் சட்டம் மௌனிக்கின்றது.
தமிழ்பேசும் எதிரிகளுக்கு எதிரான வழக்கு தமிழ் சட்டத்தரணிகள் வாதாடும் வழக்கு தமிழில் விசாரிக்கக்கூடிய சூழ்நிலையில் சாட்சிகள் வவுனியா நீதிமன்றில் பிரசன்னமாவதற்கு அச்சமேற்படுகிறது என்ற ஒரு விதண்டா வாதத்தை மட்டும் கூறி நீதிமன்ற விசாரணையை சிங்கள பகுதி நீதிமன்றுக்கு மாற்றுவது நீதிக்கு புறம்பான செயல் என்பது வெளிப்படை. எதிரிகளின் சட்டத்தரணிகள் சிங்கள மொழியில் பரீட்சிதமற்றவர்களாக இருப்பதினால் சிங்கள மொழி சட்டத்தரணிகளை நாடி பிரசன்னமாக வைப்பதும் அவர்களுக்கு வழக்கை புரிய வைக்கவும் காலம் எடுக்கும் என்பதையும் தாண்டி அனுராதபுரத்தில் எதிரிகளின் குடும்பத்தினர் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் தங்கியிருந்து வழக்கை நடத்துவது பாரிய பிரச்சினையானது. அதிலும் பார்க்க அரசாங்கம் சாட்சிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி வவுனியா நீதிமன்றில் பிரசன்னப்படுத்துவதில் என்ன தடைகள் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதில் விளப்பமில்லை. இந்த விடயத்தில் சட்டமா அதிபரின் முடிவை ஒரு சனநாயக செயற்பாடாக ஏற்கலாமா?.

இத்தனை வருடங்களாக வழக்கு வவுனியாவில் விசாரிக்கும்போது பிரசன்னமாகியிருந்த சாட்சிகளுக்கு தொடர் விசாரணையாக மூன்று நாட்களுக்கு நடைபெற கட்டளையிடப்பட்ட இந்தத் தருணத்தில் இவ்வாறான நீதிமன்ற மாற்றம் இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள விதத்தில் அமையவேண்டும் என சில கடும்போக்காளரின் அரசியல் நடவடிக்கையின் எதிர்பார்ப்பின் காரணமாகும் என அபிப்பிராயம் கூறப்படுகின்றது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்பட விரும்பாதவாறு சிலர் செயற்படுகின்றார்கள் என்ற உண்மையும் வெளிப்படையாக தெரிகின்றது. உள்நாட்டு சிங்கள நீதிமன்றங்களின் விசாரணையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலைமை மேலும் வலுப்பெறுகின்றது.