அரசியலில் எமது பார்வை

தோல்வியில் முடியவுள்ள பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

1. ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்த எடுக்கும் பலனற்ற முயற்சி
2 தமிழினத்துக்கு உத்தேச உரிமை வழங்க எடுக்கும் முயற்சியைத் தடுப்பது
3. அதற்கான முயற்சியில் ஈடுபடும் தேசிய அரசை இல்லாமல் செய்வது
4. அரசுக்கு 2ஃ3 பலத்தை இல்லாதொழிப்பது
5. பொது கூட்டணியினருக்கெதிரான வழக்குகள் இலஞ்ச ஊழல் விசாரணைகளை திசை திருப்புதல் ஆட்சியை கைப்பற்றி தப்பித்துக் கொள்ளல்

இவ்வாறன பல வேலைத்திட்டங்களுடனும் ஒரு பக்கம் இனவாதத்தை தூண்டுவதும் மறுபக்கம் புலிகளை சென்ற சூரனாக வெளிக்காட்டுவதுமாக திட்டமிட்டு செயற்படுகின்றார்கள்.

இலஞ்சம் ஊழல் வீண் விரையம் அரச சொத்தை அபகரித்தல் அதிகார துஸ்பிரயோகம் ஆட்கடத்தல் நீதிக்கு புறம்பான கொலைகளைச் செய்தல் மனித உரிமை மீறல்கள் போதைப் பொருள் வியாபாரம் பெண்களுக்கெதிரான வன்முறைக் கொடுமைகள் ஆகிய சகலதும் தமிழ் இனத்துக்கு உரிமை வழங்கும் விடயத்தில் ஒப்பிட்டால் அவை சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் கவனிக்கப்படத் தேவையற்ற விடயங்களாகிவிட்டது.
அரசாங்கம் எதையும் எந்தக் கெட்டதையும் செய்யட்டும் ஆனால் தமிழருக்கான உரிமையை மட்டும் கொடுக்க இடமளிக்ககூடாது என்ற சித்தாந்தத்தில் சிங்களவர்கள் கட்டுண்டு இருக்கிறார்கள்.

எந்த அரசை வீழ்த்த மாதுளுவேவ N~hபித தேரர் மக்களை வழிநடத்தினாரோ அதே வீழ்ந்த அரசை மீண்டும் சிம்மாசனம் ஏற்ற உள்ளூராட்சி தேர்தலில் பட்டி தொட்டி சார்பாகவுள்ள மக்களை முடுக்கிவிட்டுள்ளார்கள்;. இனவாதப் பருப்பு அந்த மட்டத்திலேதான் வேகக்கூடியது.

தேசிய அரசு ஒன்றினால் மட்டுமே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கலாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வைத்திருந்தது. இடைக்கால அறிக்கையையில் கூட சுதந்திரக் கட்சி விட்ட அறிக்கை தட்டிக் கழிப்பதை காணக்கூடியதாக இருந்தது. காலத்தை இழுத்தடித்தது சுதந்திரக் கட்சி அமைச்சர்களே. ஆகையால் தேசிய அரசை இனியும் நம்பிச் செயற்படுவது வீண் காலவிரையம்.

மாவட்ட சபையையே தரத் தயங்கிய என்பதுகளில் மாகாண சபையை தனிக்கட்சியான ஐ.தே.க. ஜே. ஆர் தலைமையில் நிறைவேற்றியது. இதற்கு 2ஃ3 அறுதிப் பெரும்பான்மையும் அவரிடம் இருந்தது.
தமிழர் தீர்வு அது போன்ற ஒரு காலம் வரும்பொதுதான் என்பதே சரியான எண்ணமாக கொள்ள வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டியது எமது நிலைப்பாடு.

பிரேமதாச தமிழை சிங்களத்திற்கு இணையான உத்தியோக மொழியாக்கியது மிகவும் கஸ்டமான ஜே.வி.பி. யின் கலகக் காலத்திலேதான் மலைநாட்டு மக்களுக்கு பிரஜாவுரிமையை வழங்க பிரேமதாச ஏற்பாடு செய்ததும் பிரச்சினையான காலத்திலேதான்.

சுதந்திரக் கட்சி இவ்வளவு காலமும் தமிழர் பிரச்சினையில் தமிழருக்கு சார்பாக என்ன நன்மையான விடயத்தை செய்துள்ளார்கள் என கோடிட்டுக் கூறமுடியவில்லை. மாறாக சிங்கள மொழியை திணித்தார்கள் இந்திய வம்சாவழியினர் ஐந்து இலட்சம் பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பச் செய்தார்கள். சோல்பறி அரசியல் அமைப்பில் பிரிவு 27 லின் கீழ் இருந்த சிறுபான்மை மக்களின் அக்கரைகளைகப் பாதிக்கக்கூடிய எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாது என இருந்ததை 72ம் ஆண்டைய அரசியலமைப்பில் நீக்கி விட்டார்கள். கல்வியில் கைவைத்து தரப்படுத்தலை புகுத்தி தமிழ் மாணவர்களுக்கு இருந்த மேல் படிப்பு வாய்ப்பை அகற்றினார்கள்.
இவ்வகையானவர்கள் தேசியக் கூட்டரசில் இருந்தாலென்ன எதிர்க்கட்சியில் இருந்தாவென்ன அவர்களால் எதுவித நன்மைகளும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

சுதந்தரக் கட்சியில் சந்திரிக்காவுடன் ஒரு சிலரே தமிழர் பிரச்சினையை தீர்க்க ஆவலாக உள்ளார்கள்.
ஐ.தே.க தனித்து ஆட்சி அமைப்பதே தற்போதைய நிலமையில் சிறந்தது