வனக் குளியல் – Forest Bathing

மனஅழுத்தத்திற்குஒருமருந்து

இது இயற்கைமுறையில் ஒருபுதுமையானவைத்தியம் இதைவிபரித்துக் கூறமுற்பட்டால் இயற்கையாகவுள்ளதாவரங்களுடன் நேரம் கழித்தல்என்பதாகும். இவ் விருப்பத்தின் மூலம் சிறந்தஆரோக்கியமானஉடலைநாம் உருவாக்கலாம். மனஅழுத்தம் அகலும். இரத்தஅழுத்தம் சீராகிதசைகள் எலும்புகளிலுள்ளகலங்கள் விருத்தியடையும். மகிழ்ச்சிமேலோங்கும்.

ஷறாஐவன்ஸ் என்றும் பிரிட்டிஸ் பெண்மணிஇக்கருத்தைஒருஆங்கிலப் பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.

வனக் குளியல் உடல் ஆரோக்கியத்தையும் உளநலத்தையும் மகிழ்ச்சியானமனத்தையும் ஏற்படுத்துகின்றது.

இந்தஅற்புதமான இயற்கைவைத்தியம் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் ஏற்படுத்தும் தாக்கம் நோய் எதிர்ப்புதன்மையைஉருவாக்குவதற்கும் உதவும். இது பற்றிஅறியபலஆராய்சிகள் நடைபெற்றுள்ளனமேலும் ஆராய்சிகள் நடைபெற்றுவருகின்றன.

காட்டுமரங்களினூடாகநடத்தலினால் கிடைக்கும் உடலைவருடும் காற்றுஅங்குகமழும் வாசனைகள் தாவரவளர்ச்சியின் கிளைகள் இலைகள் பூக்கள் மரக் கொப்புகளின் வளைவுபோன்ற இரசிக்கக்கூடிய இயற்கைஅழகுஆகியஎல்லாமேவனக் (காட்டு) குளியலின் அம்சங்களாகின்றன.

பாரியமரங்களின் சுற்றுப்புறப் பட்டைகளிலிருந்துவெளியேறும் phytoncide என்னும் எண்ணைப் பதார்த்தம் அம்மரத்தைகிருமிகளிலிருந்தும் பூச்சிகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகசுரக்கப்படுகின்றன. அவற்றைசுவாசித்துவாசனையைப் பெறுவதால் மனிதர்களுக்கும் நோய் எதிர்ப்புசக்தியைஉடலில் அதிகமாக்கும். அத்துடன் மனஅழுத்தத்தைஏற்படுத்தும் cortisol என்னும் நொதியத்தின் அளவைக் குறைக்கும்.

கூடியநேரத்தை இயற்கையுடன் செலவளிப்பதினால் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மையளிக்கும் என்பதோடுஅவ்வாறானபழக்கம் யோகாதியானம் பிராத்தனைஉடற்பயிற்சிபோன்றவைபோன்றுஅர்த்தமுள்ளஉறவுள்ளபலனைக் கொடுப்பதோடுஅவ்வாறானஇயற்கையுடன் நேரசெலவளித்தலைமீண்டும் மீண்டும் தொடர்வதால் உறவுகள் ஆழமாகப் பதியும்.

மரங்களைகட்டிஅணைத்தல் என்றஒருபுதியஅணுகுமுறைஅம்சத்தையும்வனக் குளியலில்அடக்கலாம்.

ரிச்சாட் லோவ் (Richard Louv) ஒருஅமெரிக்கன் புத்தகஆசிரியர் அத்துடன் பிள்ளைகளும் இயற்கையும் என்றவலையத்தளத்தின் இணை ஸ்தாபகர் இந்தவனக்குளியல் பற்றிஅதிகமானஈடுபாட்டைகொண்டுள்ளவர் கூறுகிறார். “எவ்வளவு கூடியநேரத்தை இயற்கையுடன் செலவிடுவதின் மூலம் இயற்கையுடன் உணர்வுகளினாலும்தொடுதலினாலும்ஒருஉறவைஏற்படுத்துதல் அதற்குத் தகுந்தநன்மைகளைஅளிக்கும்”என்கின்றார்.

இயற்கைக் குறைபாட்டுவியாதிஎன்றுஒருஉள்ளுணர்வுவியாதிஉள்ளது.இதைN.D.D   (Nature Deficit Disorder) எனஅழைக்கப்படுகின்றது. இது இலங்கைபோன்றஉ~;ண வலையநாடுகளில் வசிப்பவர்களுக்குஎந்தளவுக்குபொருந்தும் என்பதுதெளிவில்லை. ஆனால் குறைவானவெப்பநிலைகொண்டமேலைநாடுகளில் சீவிப்போர் அனேகருக்கு இவ்வியாதி இருப்பதாகஆராய்சிகள் தெரிவிக்கின்றன. இந்தநோயினால் ஏற்படும் அறிகுறிகளாகஅவதானிப்புசீராக இல்லாமை (Lack of Concentration) சோம்பல்  ( Lethargy) குறைந்தமனநிலைமை(Low moods) போன்றவையைக் காட்டும். இவ்வியாதிக்கானதீர்வாகவனக் குளியல் அமையும்.

மேலைநாடுகளில் தற்போதுபரந்துள்ளபிரச்சினையான S.A.D . என்கின்ற(Seasonal Affective Disorder) குளிர் காலநோய் 20மூமக்களைப் பாதிக்கின்றது. சூரியவெளிச்சமின்மையானகாலமானதால் பச்சையத்தைஉருவாக்கும்இலைகள் தளிர்கள் அற்றுதாவரங்கள் வெறும் தண்டும் தடியுமாககிடப்பதால் இயற்கையுடனானதொடர்புகள் மக்களுக்குகிடைக்கபெறாததால் இந்நோய் ஏற்படுகின்றது.

புதுமையானநவீனவாழ்க்கையில் (Modern life) மனிதர்களைஉள் வீட்டுபிராணிகளாகஆக்கிவிட்டது. அதுஒருபரிதாபகரமானவாழ்கையைஉருவாக்கிவிட்டது. .வீடுஅதன்பின் அலுவலகம் அங்கு 08 மணித்தியாளங்கள் அதன்பின் சோர்வுஉயிரற்றதன்மைமீண்டும் நான்குசுவர்களுக்குள் மெத்தையில் முடிவு. வேலைக்குசெல்லாதவர்கள் வீட்டுவேலைகளானசமையல் பிள்ளைபராமரிப்புவேறும் சுத்தம் செய்தல் எனவீட்டுக்குபின்புறத்திலுள்ளதோட்டத்திற்கு கூட செல்லமுடியாதவாறுவேலைப்பளுஉள்வீட்டிற்குள் இருக்கும்.

மனிதனால் உருவாக்கப்பட்டகட்டிடஉலகத்துக்குள்ளேயேபூட்டுக்கள் போட்டுபூட்டிவாழ்வதைவிட இயற்கையின் அழகிலேஎமதுஉணர்வுகளால் வனக்குளியலில் ஈடுபடுவதுஎத்தகைய இன்பத்தைஅளிக்கின்றது.

மூங்கில் மரச்சோலைக்குள்ளேஎதுவிதசப்தமுமின்றிஅமைதியாகநடந்து இடையிடையேமூக்கிலெட்டும் வாசனையைமுகர்ந்தும் மூங்கிலின் நீண்டகிளைகள் அதன் வளைவுகள் இலைகள் அதன் அசைவுகள் அவைகளை இரசித்துக் கொண்டுசெல்வதால் மனக்கவலைகளைமறக்கமுடியும்.