நாடா கட்சியா

அரசியலில் . . . . எமது பார்வை
நாட்டின் நலனா ? கட்சியின் நலனா ?
அரசியல்வாதிகளின் அதி தீவிர அக்கரை நாட்டினை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல உழைப்பதிலா? அல்லது தாங்கள் சார்ந்த கட்சி அரசாங்கம் அமைக்கக்கூடியவாறு முயற்சியை எடுப்பதிலா?
நாட்டை அபிவிருத்தி செய்தால் அது மக்களைச் சென்றடையும். மக்களின் பொருளாதாரம் மேம்படும். மக்களின் சகல அடிப்படை தேவைகளும் பூர்த்தியாகும். மக்களிள் வாழ்க்கைத்தரம் உயரும். பசி பட்டினி அகலும். வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்கள் என்று ஒரு கூட்டம் இல்லாது ஒழிந்துவிடும்.
கட்சியை வெற்றியடைவதற்கு முன்னுரிமை கொடுத்தால் அது அக்கட்சியின் சகல மட்ட அங்கத்தவர்களினதும்; அவர்களது குடும்பம் சொந்தம் பந்தம் ஆகியோரினதும் வாழ்க்கையும் வாழ்க்கையின் தரத்தையும் உயர்த்தும்.
இத்தனை வருடகால கட்சி அரசியலினால் மக்கள் கண்ட பலன் எதுவுமில்லை. தெற்கிலோ வடக்கிலோ எந்த நன்மைகளும் மக்களைச் சென்றடையவுமில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை மேலும் கூடியுள்ளது என்பதே உண்மை. தெற்கில் தொழிலாளர் வர்க்கம் இன்றும் பாணும் பிலேன் ‘டீ’ யுடனும்தான் வாழ்கின்றார்கள். மலை நாட்டில் தேங்காய் இல்லாத ரொட்டியோடும் வெங்காயமில்லாத சம்பலோடும் காலத்தைக கழிக்கின்றார்கள். வடக்கில் கூலித் தொழிலாளர்கள் ஒரு நேரச் சாப்பாட்டுக்கே திண்டாடுகின்றார்கள்.
அபிவிருத்தி வேலைகள் திறம்பட செயற்படுத்தப்படுவதில்லை. வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதில்லை. கீழ்த்தட்டு மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையிலுள்ளது. வறிய மக்களின் வாழ்கைத்தரம் உயரவில்லை.
ஆனால் அரசியல்வாதிகளோ பெரும் சொத்துக்களை சேர்த்து ஒரு புதுப்பணக்கார கூட்டத்தையே உருவாக்கியுள்ளார்கள். கார்கள் பங்களாக்கள் வெளிநாடுகளில் முதலீடுகள் என்று சொத்து சேர்த்து வைத்திராத அரசியல்வாதிகளாக எவரையும் காணமுடீயாது.
அத்தோடு அரசியல் கொலை இனத்துவேசம் மதத்துவேசம் இலஞ்சம் ஊழல் அதிகார துஸ்பிரயோகம் போதை வஸ்தில் சம்பந்தம் ஆட்கடத்தில் ஆகியன கட்சி அரசியலினாலேயே முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சங்கைக்குரிய மாதுளுவௌ N~hபித தேரர் தெற்கிலுள்ள நாற்பத்தி ஆறு சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்போடு எடுத்த திறமை மிக்க முடிவுதான் ‘தேசிய அரசாங்கம்’ என்ற கோட்;பாடு. இன்று அவரில்லை. ரணிலும் சந்திரிக்காவும் அந்த நிலைப்பாட்டில் இப்போதும் ஓரளவு செயற்பட்டாலும் சனாதிபதியும் சுதந்திரக் கட்சியினரும் கட்சி அரசியலிலிருந்து விடுபடுவதாகவில்லை.
சென்ற சனாதிபதி தேர்தலின்போது 2015ம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சியை ஊழல் மிக்க சர்வாதிகார குடும்ப ஆட்சி என்றெல்லாம் மேடை மேடையாக பேசிய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் போட்டியிட்டு தோல்வியடையச் செய்த ராஜபக்~hவை அதே ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தன் தலைமையிலுள்ள கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தி அவரை ஜந்து இலட்சம் வாக்குகள் பெறச்செய்தார். அவரை மட்டுமல்ல இன்று கூட்டு எதிரணி எனக்கூறிக்கொண்டு அரசுக்கு தலையிடியாகச் செயற்படும் 53 பா.உ களின் வெற்றிக்கும் கட்சி அரசியலே காரணம்.
தனது கட்சியில் போட்டியிட்டு தோழ்வியடைந்தவர்களையும் தேசியப் பட்டியல் மூலம் பா.உ களாக உள்வாங்கினார். இவைகளெல்லாம் கட்சி அரசியலிலுள்ள ஆர்வச் செயற்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றது.
கட்சி அரசியல் என்பது அதே நபர்களை மீண்டும் மீண்டும் பா.உ. ஆக்குவதேயாகும். இதிலிருந்து விடுபடவேண்டுமானால்; கட்சியை வெற்றிபெறச் செய்வதிலும் பார்க்க மக்கள் தங்கள் பகுதியில் போட்டியிடுபவர்களில் சிறந்த ஒருவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதே உகந்தது.
வெற்றி பெற்றவர்கள் பின்னர் ஒன்றிணைந்து நாட்டை பற்றி சிந்தித்து செயலா ற்ற வேண்டும். அதற்கு ஊர் பெரியவர்களும் மத குருமார்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இணைப்பாளர்களாக செயற்பட வேண்டும்.
தேசிய அரசின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுபவர்கள் கல்வியறிவும் ஆற்றலும் கொண்டவர்களாகவும் எந்த விதத்திலும் கறைபடிந்திராதவர்களாகவும் சிறப்புதன்மை வாய்ந்தவர்களாகவும் அமையவேண்டும்.