விவசாயம்

வீட்டுத்தோட்டம்
இக் காலகட்டத்தில் ‘ஒவ்வொரு வீட்டிலும் விவசாயச் செய்கை’ என்ற விதி தானாகவே நிச்சயிக்கப்பட்டுவிட்டது. பெருகிவரும் தொற்றா நோய்களின் தாக்கம் வீட்டுத்தோட்டத்தை விருத்தியாக்கியுள்ளது. பயிர் வளர்த்துப் பண்பட்ட பரம்பரையினராய் இல்லாதவர்களும் பிணித் துயர் போக்க பயிர்ச் செய்கையில் பழக்கமாகின்றார்கள்.
வீட்டுத்தோட்டத்திற்கு ஏற்ற சில இலகுவான செய்கைமுறை தகவல்கள்:
வீட்டு வளவைச் சுற்றியுள்ள வேலிகளை பயன்படுத்துங்கள். வேலிக்கு வேண்டிய கதிகாலாக கறிமுருங்கை மரம் வாதனாராணி மரம் சண்டி மரம் அகத்தி மரம் ஆகியவற்றை நட்டு வையுங்கள். வேவையான இலைகள் தினமும் கிடைக்கும்.
அவ்வேலிகளில் குறிஞ்சா தூதுவலை கொவ்வை போன்ற இலைகள் தரும் கொடிகளையும் பால்பிசுக்கை பணி அவரைப் பயிர்களையும் வளர்த்து நார் சத்துள்ள காய்கறியை பெறலாம். வளவின் ஒரு மூலையில் சுண்டங் கத்தரி கருவேப்பிலை மரங்களை வளர்க்கலாம்.
வல்லாரை புதினா கற்பூரவள்ளி போன்றவற்றை பெரிய பூச் சாடிகளில் வளர்க்கலாம்.
முடியுமாயிருந்தால் இரண்டு மூன்று கத்தரி தக்காளி சில மிளகாய்கன்றுகள் என வளர்த்தால் வீட்டுச் சமையலுக்கு போதுமானதாக இருக்கும்.
( ஆ…..ர்)