எம்மை பற்றி

மனிதம்

சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு வெளியீடு

அன்றாடம் நடைபெறும் நிகழ்வுச் செய்திகள் கட்டுரைகள் சினிமா விமர்சனங்கள் போன்றதும் வேறும் அதே போன்ற பொதுவான விடயங்களில் இப் பத்திரிக்கை ஆர்வத்தைச் செலுத்தாது. மனித சமூதாய வாழ்க்கையில் தனி மனிதர்களும் தனிக் குடும்பத்தவர்களும் முற்சிந்தனையின்றியும் கவனயீனமாகவும் தான்தோன்றித்தனமாக செயற்படுவதால் அவர்களுக்கு ஏற்படும் விபரீத விளைவுகளையும் அவர்களால் பிறருக்கு ஏற்படுத்தப்படும் தீமைகளையும் தவிர்த்துக் கொள்ளுவற்கும் அதேபோன்று அனாவசியமான உயிரிழப்புக்கள் அங்கவீனங்கள் நோய்கள் சிறுவர் பெண்கள் சீரழித்தல் அதிகார துஸ்பிரயோகங்கள் அடிப்படைச் சட்டங்களை அறியாததினால்; சிரமங்களுக்குள்ளாகுதல் போன்றவற்றில் மக்களைத் தெளிவுபெறச்செய்ய இவ்வெளியீடு முயற்சிக்கும். மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் எடுக்கப்படும் ஒவ்வொரு பிழையான நடவடிக்கைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த வெளியீடு ‘ மனிதம் ’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது ஒரு புதிய முயற்சி. பின்னர் வார இதழாக அச்சிடப்பட்டு பத்திரிக்கையாக ஆரம்பிக்கபடவுள்ள இந்த வெளியீடு முதலில் இணையத்தில் இதற்கென ஒரு இணைய வலைத் தளத்தை உருவாக்கி ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதில் கீழ்காணும் இணைப்புக்களை இவ்வெளியீடு கொண்டிருக்கும்.

  1.  சட்டமும் ஒழுங்கும்
  2. அரசியலும் விமர்சனமும்
  3. மனிதமும் உரிமைகளும்
  4. ஆரோக்கியமும் உணவும்
  5. விவசாயமும் உற்பத்தியும்
  6.  நாட்டு மருந்தும் மூலிகைகளும்
  7. ஆன்மீகமும் ஒழுக்கமும்
  8.  சமூகமும் சேவைகளும்
  9. சுய தொழிலும் முயற்சியும்
  10.  சுகாதாரமும் சுத்தமும்
  11.  கல்வியும் அறிவும்
  12.  உடற்பயிற்சியும் விளையாட்டும்
  13.  குடும்பமும் பாரம்பரியங்களும்
  14. கலையும் கலாச்சாரமும்
  15. தொற்றாத நோய்களும் பற்றாது தடுப்பதும்
  16.  நன்நீரும் மண்வளமும்

 

தேவை ஏற்படின் வேறு தலைப்புக்களிலும் இணைப்புக்கள் சேர்க்கப்படும்.

விடயங்கள் பற்றிய சகல கட்டுரைகளும் அதிகாரமிக்கதாக ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் சம்பந்தப்பட்ட விடயதானத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறைசார் பட்டதாரிகளினால் மட்டுமே எழுதப்பட்டதாக இருக்கும் அல்லது சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிக்கையாக இருக்கும்.
ஆசிரியர் ‘மனிதம்’