தமிழ் மக்களின் பிரச்சினைத்தீர்வுக்குதடையாக இருந்துவருவதுதமிழர்களேதமிழர்களேதமிழர்களே

இது இன்றையகாலகட்டத்தில் நடப்பதைவைத்துக் கூறப்படும் அனுமானமல்ல. காலங்காலமாகதமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபட்டதலைவர்கள் கட்சித் தலைமைகள் ஆகியோரின்செயற்பாட்டில் அவதானிக்கக் கூடியதாகவிருந்தநிகழ்வுகளின் அடிப்படையில் அனுமானிக்கப்பட்டவைகள்.

சமஷ்டிகேட்டசிங்களத் தலைவர்கள்

1925ல் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காதனதுலண்டன் பல்கலைக்கழகசட்டம் சார்ந்தபட்டத்தைப் பெற்று இலங்கைதிரும்பியபோதுபத்திரிகையில் இலங்கைக்கானஒருஅரசியல் தீர்வாகசமஷ்டி முறையிலானநிர்வாகம் பற்றிஅடுக்கடுக்காகபந்திபந்தியாகபத்திரிகைகளில் எழுதிகருத்தைதெரிவித்துவந்திருந்தார் எனவரலாறு கூறுகின்றது.

ஆனால் அதைஎதிர்த்துநிராகரித்ததுஒருதமிழ் அறிஞரான ஜேம்ஸ் ரட்ணம் என்பவர் மாற்றுக் கருத்தைபத்திரிக்கையில் எழுதிக் கொண்டிருந்தார் எனவும் பதிவுகள் வரலாற்றுசெய்திகள் கூறுகின்றன.

சோல்பரிஅரசியலமைப்பைஆங்கிலேயர்கள் இலங்கைக்காக1944ம் ஆண்டில் தயாரித்தபோதுஅன்றிருந்ததமிழர் தரப்பு ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தலைமையிலானகாங்கிரஸ் கட்சிபண்டாரநாயக்காவினால் முன்வைக்கப்பட்டிருந்தசமஷ்டி அமைப்புத் தீர்வைதாங்கள் ஆதரிப்பதாககூறவில்லை.தங்கள் தரப்புகோரிக்கையாகஐம்பதிற்குஐம்பதுஎன்றஒருநடைமுறைச் சாத்தியமற்றதீர்வைமுன்வைத்தார். அதாவதுசிங்களபெரும்பான்மையினர் அங்கத்துவம் ஐம்பதுவீதமாக இருக்கவும் ஏனைய தமிழர்கள் முஸ்லீம்கள் பறங்கியர்கள்அடங்கியசிறுபான்மையினருக்கும் ஐம்பதுவீதஅங்கத்துவம் இருக்கவேண்டும் என்றகோரிக்கையாகும். 72 சதவீதபெரும்பான்மையினமக்கள் வாழும் நாட்டில் வெறும் 28 சதவீதசிறுபான்மையினர் சரிசமஅந்தஸ்து கோருவதுகிடைக்கக் கூடியசாத்தியமானதா? இந்தக் காலகட்டத்தில் தமிழரசுதந்தையும் மற்றும் டாக்டர் நாகநாதனும் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடப்படவேண்டியது.

இதில் ஆச்சரியப்படக் கூடியதுஎன்னவென்றால் அந்தச் சந்தர்ப்பத்தில் கண்டியசிங்களமக்கள்தங்களின் கோரிக்கையாகசோல்பரிஆணைக்குழுவுக்குமுன் சமர்பித்ததுஒருசமஷ்டி அமைப்பிலானஅரசியலமைப்பையேஎன்றால் நம்புவீர்களா? அதுவும் கண்டியசிங்களபிரதேசங்கள் கீழ் நாட்டுசிங்களபிரதேசங்கள் மற்றும் வடக்குதமிழர் பிரதேசங்கள் என மூன்றுபிரதேசங்கள் உள்ளடக்கியதானசமஷ்டிக்குபரிந்துரைத்திருந்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தைதமிழர் தரப்புநழுவவிட்டுவிட்டார்கள். பண்டாரநாயக்காமுதற்கொண்டுகண்டியசிங்களவர்கள் தரவிருந்தசமஷ்டியைவிரும்பிஏற்காமல் விட்டு இப்போதுகெஞ்சிக் கேட்டுக்கூத்தாடிஅலைகின்றார்கள். இதுதான் அன்றையதமிழ் தலைமைகளின் அரசியல் ஞானம்.

தமிழர்களிடையிலானஎதிரும் புதிருமாகஅரசியல்

1949ம் ஆண்டுதமிழரசுகட்சியைஆரம்பித்ததந்தைசெல்வாசமஷ்டியைகோரிபலபோராட்டங்களைநடத்தினார். அப்போ ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் சமஷ்டியைஎதிர்த்துஅரசியல் நடத்தியது. தமிழர்களின் தலைவர்கள் ஒரேகோணத்தில் சிந்திக்கவில்லைபயணிக்கவில்லைஎன்பதுஇன்றுவரையும் தொடர்ந்துவரும் நிலைப்பாடாகும். பலர் சமஷ்டி என்கிறார்கள் இன்னும் சிலர் ஈழம் என்றநடைமுறைசாத்தியமற்றதீர்வை இன்னமும் கனவுகாண்கின்றார்கள். அந்தவகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாசமஷ்டித் தீர்வை இறுகப் பிடித்துதமிழரசுகட்சியின் கொள்கைக்குஉறுதுணையாகவுள்ளார். புலம் பெயர்ந்தமக்;களும் இங்கு இன்னமும் புலிகளின் அருவருடிகளாகசெயற்படுபவர்களும் ஈழம் என்றுஈனமும் முடியாதநக்கவும் முடியாதஒருஎண்ணத்தோடுகாலத்தைஓட்டுகின்றனர் ஈழத்தைத் தீர்வாகஇன்றும் எண்ணுபவர்கள் தமிழ் பிரதேசங்களில் நிரந்தரசமாதானமற்ற சூழலைஉருவாக்கவிளைபவர்கள் என்றேகருதவேண்டும். ஈழம் உருவாகாதுஆனால் ஷெல்லடி இரத்தக் களரிஅகதிகள் அனாதைகள் விதைவைகள் அங்கவீனமுற்றோர் காணாமல் ஆக்கப்பட்டோர் மரணமடைந்தோர் எனசோகப் பட்டியல் மட்டும் நீண்டுகொண்டேபோகுமேதவிரஈழம் அமையாது. அதுஈற்றில் இலங்கையைஒருமுழுமையானசிங்களபொளத்ததேசமாகமாற்றமடைவதற்கே வழி வகுக்கும்.

இணக்கஅரசியல்

நல்லாட்சிஅரசுஎன்றுஒன்றுசிறுபான்மை இனத்தினரின் ஒட்டுமொத்தஆதரவோடுஏற்படுத்தப்பட்டபின்னரும் அவர்களைநம்பிஒருதீர்வுக்குகாத்திராமல் அரசாங்கத்துக்குமுண்டுகொடுத்துக் கொண்டு இருக்கிறார்களேஒழியஎதையும் தமிழருக்குபெற்றுத்தரக் கூடியதாகசெயற்படத் தகுதியற்றவர்கள் என்றுசிலதமிழ் தலைவர்கள் இந்தநல்லாட்சியைஆதரிக்கும் தமிழ் தரப்பினரைகுற்றம் சாட்டுகின்றார்கள். அவர்களைவீPட்டுக்குஅனுப்பிவிட்டுஅந்த இடங்களில் தங்களைபிரதிநிதிகளாக்குமாறுமக்களைக் கேட்கின்றார்கள். அவர்களின் கருத்துப்படி இந்தஅரசுஎந்ததீர்வையும் சிறுபான்மையினருக்குவழங்காதுஎன்றுஎண்ணுகிறார்கள். வேறுஅரசுவரும் என்றால் அது ராஜபக்ஷாவின் கைப்பொம்மைஅரசாகவேஅமையும் என்பதைவிடவேறுயூகம் இருக்கின்றதா? அந்தஅரசுபுலிகளைத் தோற்கடித்தபின்புதமிழ் முஸ்லீம்மக்களின்உணர்வுகளைபாதிக்கும்வiகையில் நடாத்தியகாட்டுதர்பார் கொடுமையானசெயற்பாடுகளைஎவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

இனியும் பிரபாகரன் காலம் போன்றுபோரிடும் சூழ்நிலையைஎண்ணியும் பார்க்கமுடியாது. ரணம் பட்டசிங்களஅரசுகள் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளில் மிக்கஅவதானத்தோடுஉள்ளார்கள். ஒருசிறுஅசைவையும் உண்ணிப்பாககவனிக்கபுலனாய்வுகடமையில் விடப்பட்டுள்ளது. அதனாலேதான் இராணுவத்தை இன்னும் குறைக்காதுவடகிழக்கில் நிரந்தரமாகதங்கவைத்துள்ளார்கள். சமஷ்டியையேதருவதற்குதயாராகவில்லாததென்னிலங்கைஅரசியல் அதுஈற்றில் ஈழமாகஉருவெடுக்கும் எனஅஞ்சுகின்றமனநிலைமையோடுஇருந்துகொள்ளும் போதுநாம் எவ்வாறுஈழத்தைஎண்ணமுடியும். சிறுபான்மையினரானதமிழ் முஸ்லீம் மக்கள் என்றும் பெரும்பான்மை இனமாகமாற்றமடையமுடியாது. ஆகையால் சிறுபான்மை இனத்தவர்கள் பெரும்பான்மைஅரசோடு இணைந்தேகாரியத்தைசாதிக்கவேண்டியகட்டாயத்தில் தமிழர் நிலைமைமாற்றமடைந்துள்ளது. சார்பானஅரசைஆதரித்துபெறக் கூடியதீர்வைபெறமுயற்சிகள் எடுப்பதேகாலத்தின் கட்டாயம். அதற்காகதமிழர்களின்தலைவர்கள் ஒன்றிணைந்துசெயற்படுவதேதற்போதையஅரசியல் தேவைப்பாடாகும். இதனைஉணராதுபதவிஆசையில்ஒன்றுபட்டுசெயற்படாதவர்கள் மீண்டும் ஒருதீர்வுக்குதடையாகவுள்ளதமிழர்களாகஅடையாளம் காணப்படுவார்கள். இனவாதபேச்சுக்களிலிருந்துதமிழர்கள் தம்மைகட்டுப்படுத்தவேண்டும். அவைதீர்வைகொடுக்கஎண்ணம் கொண்டுசெயலாற்றிவரும் நல்லஉள்ளங்கொண்டசிங்களமக்களினதும் தலைமைகளினதுமனதையும் இனவாதிகளாகமாற்றமடையவைத்துவிடும்.

தென் இலங்கையைசீற்றமடையதமிழ் தலைமைகளின் பேச்சு
அரசியல்வாதிகள் அநேகசந்தர்ப்பங்களில் தொடர்ந்தும் அவசரமாகஅதன் எதிரலைகளைஎண்ணாதுஅல்லதுவிளைவுகளைஅறியாதுகருத்துக்களைவெளியிட்டுவிடுகிறார்கள். இவ்வாறானசந்தர்ப்பங்களில் அக்கருத்துபிரிதொரு இனத்தைஅல்லதுமதத்தைஅல்லதுஅரசியல் நிலைமையைபாதிக்கக்கூடியதாகஅமைந்துவிடும்.அத்தோடுசிலர்அக்கருத்தைதங்களுடையஅரசியல் செல்வாக்குக்குபயன்படுத்தக்கூடியவாறுபயன்படுத்திக் கொள்ளுவார்கள்.உதாரணமாகஅண்மையில் ஐக்கியதேசியகட்சிஇராசாங்கஅமைச்சர் ஒருவர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சிலபகுதிகள் இருந்தபோதுசட்டம்ஒழுங்குசீராக இருந்ததாகவும் பெண்களுக்கெதிரானவன்முறைகள் நடைபெறக்கூடியவாய்ப்பேஇருக்கவில்லைஎன்றும் தற்போதுபெருகிவரும் பெண்களுக்கெதிரானவன்முறைகளை இல்லாதொழிப்பதற்குஅவர்களின் ஆட்சிமீண்டும் எழுச்சிபெறவேண்டுமென்றகருத்துப்படஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

நல்லாட்சிஎன்றுஇரு கட்சிகளுக்கிடையிலானஒரு கூட்டாட்சிஏற்பட்டுஅதனைஉருவாக்குவதற்குமுக்கியபங்குவகித்தஐக்கியதேசியகட்சியில் ஒருமுக்கியவராகஅமைச்சரவைகடமையில் இருந்தவர் அக்கட்சிகொள்கைக்குஏற்பில்லாதஅத்தோடுஉண்மைக்குபுறம்பானஒருகருத்துவெளிப்பாடுதென்இலங்கைமக்களின் நல்லாட்சிக்கானஎண்ணத்தைதிசைதிருப்பக்கூடியதாகஅமைந்துவிட்டது.

உணர்ச்சிவயப்பட்டுகிஞ்சிட்டும் சிந்திக்காதுவெளியிடப்பட்டவார்த்தைப் பிரயோகங்கள் தான் சார்ந்தகட்சிக்குபாதிப்பைஉண்டாக்கியதுமட்டுமல்லாமல் இனப்பிரச்சினைக்கானஒருதீர்வைபுதியஅரசியல் அமைப்பைஉருவாக்குவதன் மூலம் ஏற்படகூடியதாக இருந்தநிலைமையிலும் பாதிப்பைஏற்படுத்திவிட்டதுஎனஅறிவுபூர்வமாகசிந்திப்பவர்கள் கருதுகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தகாலத்தில் வன்முறைகள் இடம்பெறாததுஅவர்களின் நல்லாட்சிகாரணமாகவேதான் எனஎவராவது கூறினால் அதுஏற்கப்படமுடியாததொன்று. அவர்கள் நடத்தியதுநல்லாட்சிஅல்ல. அவர்களின் சர்வாதிகாரஅடக்குமுறைஎனகூறக்கூடியஆட்சிமுறையில் மக்கள் அச்சம் காரணமாகவன்முறைகள் இல்லாதிருந்தது. அவ்வாறானசர்வாதிகாரஅடக்குமுறைஆட்சிஒன்றுஏற்பட்டுமக்கள் தினம் தினம் பயத்தில் வாழவேண்டிய சூழ்நிலைஉருவாக்கப்படவேண்டுமா? கோத்தபாய ராஜபக்ஷ சனாதிபதியாகவருவதைஎதிர்க்கும் சிங்களத் தலைவர்கள் அவர் சர்வாதியாகஅரசைகொண்டுநடத்துவார் எனஅச்சம் தெரிவிக்கின்றார்கள். பிரபாகரன் ஆட்சியும் அவ்வாறே இருந்தது.

பயம் என்றகாரணமின்றிமக்கள் சுயமாகசெயற்பட்டுவன்முறைகலாசாரம் ஒழிக்கப்படவேண்டும் என்றநிலைமைஉருவாக்கப்படுவதேஉத்தமமானது. ஒருஜனநாயகமுறையில் சட்டம் ஒழுங்குக்குஅமைவாகவன்முறையற்றுவாழும் மக்களைஉருவாக்கவேண்டியதுதான்இன்றையதேவைப்பாடாகும்.