பொய்யாக பகிரப்படும் செய்திகள்

பொய்யாக பகிரப்படும் செய்திகள்

கனகநமநாதன் LLB (col. Uni.)

ஊடக சுதந்திர விதிகளை அனுசரித்தே செய்திப் பரவல் நடைபெறவேண்டும். பத்திரிக்கை தர்மம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எழுத்தில் வடிக்கப்படும் ஊடகங்களான பத்திரிக்கைகள் சஞ்சிகைகள் இவற்றைக் கடைப்பிடிப்பதாக கருதப்படுகின்றது. அதனால் செய்திகள் உண்மைத்தன்மை வாய்ந்தவையாக ஓரளவு விளங்குகின்றது. பொய்யான செய்திகள ;தன்னிச்சையாகவும் தான்தோன்றித ;தனமாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தால் அது எவரையாவது ஏதாவதுவிதத்தில் பாதிக்குமாயிருந்தால் அதை நிவர்த்தி செய்ய அறிந்து கொண்ட அடுத்தநாட் பதிப்பில் பிழைதிருத்தம் இடம்பெறவேண்டும். இதுஒருவிதி. செயற்படுத்தாவிடில் சட்டத்தின் துணையைநாடலாம்.

மின் இணையத்தளங்களில் செய்திப் பகிரப்படுதல் மிகவும் வேகமானது. அதனால் முகப்புத்தகத்தில் செய்திகள் பலதரப்பாரிடமிருந்து பலவித்தியாசமாக செய்திகள் வருகையின் மூலம் அறிவு விரிவடைகின்றது. ஆனால் எழுத்திலான பத்திரிக்கையில் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகளைபத்திரிக்காதர்மத்தை இணையத்தளத்தில் அனேகர் கடைப்பிடிக்காது மீறிக்கொள்வதை அவதானிக்கமுடிகின்றது. உறுதிப்படுத்தப்படாத எந்தச் செய்திகளையோ கருத்துக்களையோ அவர்களால் துணிவுடன் வெளியிடமுடிகிறது. இது ஒருதேவைக்கான பக்கச்சார்பான செய்தியாகவோ அல்லதுவருமானம் ஈட்டும் நோக்கமாகவும் இருக்கலாம்.

இவ்வாறான பொய்யானசெய்திகள் ஜனநாயகத்தின் மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் சட்டம் ஒழுங்குமீதும் பாரியசவாலாகஉருவெடுத்துள்ளது. தேர்தல் இடம் பெறும் காலங்களில் இவ்வாறானசெய்திகளுக்கு கூடியவரவேற்பும் ஆதரவும்கிடைத்திருந்ததாகஇதுபற்றியஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்கதேர்தலின் போது இவை கூடியஅளவில் சாதிக்கப்பட்டதாகதகவலுண்டு. பொய்யானசெய்திப் பகிர்வுஆரோக்கியமானஎதிர்காலத்தைசிதைத்துவிடுகின்றது.

முகப்புத்தகத்தில் பொய்யானசெய்திகாணப்படும்போதுஅதனைப் பார்வையிடுபவர்கள் கேள்விகளால் அதன் உண்மைத் தன்மையைவெளிக்கொணரவேண்டும். உதாரணமாக‘அமெரிக்கா 3வது உலகயுத்தத்தைசீனாவுக்கெதிராகஆரம்பிக்கஅடிப்படைஏற்பாடுகளைச் செய்கின்றது’எனஅமெரிக்கசனாதிபதி கூறியதாகஒருசெய்திஅமைந்திருந்தால் அதைவாசிக்கும் ஒருவர் ‘எங்கேவைத்து கூறினார் எப்போது கூறினார்எந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுஇதைக் கூறினார்’எனபலகேள்விகளைகேட்டுவிடவேண்டும்.

அண்மைக்காலநிகழ்வுபற்றியசெய்திஒன்றுபலரைத் தடுமாறச் செய்துள்ளது. இலங்கைஅரசாங்கத்தால் ஜ.நா.மனிதஉரிமைபேரவையின் 2015ம் ஆண்டுகூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு இதுவரையும் முழுமையாகநடைமுறைப்படுத்தப்படாமலுள்ளதீர்மானத்தைநடைமுறைப்படுத்தகாலஅவகாசம் கேட்டதைவைத்துசிலர்அரசியல்வாதிகளும்; உட்படகருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். அவகாசம் கொடுக்கவேண்டுமென்றும் அவகாசம் கொடுக்கக் கூடாதெனவும் கருத்துக்கள் பகிரப்பட்டன. ஆனால் ஒருவர் தனதுமுகப்புத்தகத்தில் சிலதமிழ்த் தலைவர்கள் அவகாசம் கொடுக்கவேண்டும் எனகையெழுத்திட்டுஐ.நா. தாபனத்திற்குஅனுப்பியுள்ளனர் எனவெளியிட்டுள்ளார். ஆனால் உண்மையில் அவகாசம் கொடுக்கக் கூடாதென்றேஅவர்கள் கையொப்பமிட்டுஅனுப்பியிருந்தார்கள். ஆகையால் எதுஉண்மையோஅதைப்பொய்யாக்கித் திரிவுபடுத்தப்பட்டசெய்தியாகக்காணப்பட்டது.

அவகாசம் கொடுக்கப்படாதுவிட்டால் ஐ.நா. பேரவைத் தீர்மானத்தைஎவ்வாறுசெயலுருவம் பெறச் செய்வதுசாத்தியமாகும் என்றகருத்துஒருபுறம் சிந்திக்கப்படவேண்டியதாகும்.
இவ்வாறானகுழப்பமானபொய்யானகருத்துக்கள் பகிரப்படுவதுபலஆண்டுகளாகநடைமுறையிலிருந்துவந்துள்ளது. எனினும் இணையத்தளங்களில் வந்துள்ளசிலரின் தனிப்பட்டசெய்திப்பதிவுகளைப் பார்க்கும்போதுஎவரும் உறுதிப்படுதப்படாதஎந்தக் கருத்துக்களையும் அசாத்தியத் துணிச்சலோடுவெளியிடுவதற்குஉத்வேகம் பிறந்திருக்கின்றதுஎனலாம்.ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவைமக்களுக்குஅறிவூட்டுதலையும் தெளிவாக்குதலையும் ஒருகடமையாகக் கொண்டுள்ளன. அதனால் ஊடகங்களுக்கானநெறிமுறைகளைஅனுசரித்துசெயற்படும் போதுதானாகசிறப்புத் தன்மைபேணப்படும்சாத்தியமுண்டு.

போலியானசெய்திகளும் குழப்பங்களும் நீண்டகாலநோக்கில் எமதுசமுதாயமாண்புகளின் வளர்ச்சிக்குத் தடைகளைஏற்படுத்துபவைகளாககாணப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதில் ஊடகவியளாளருடன் பொதுமக்களும் சேர்ந்துபோலியானசெய்திகளை இனங்கண்டுபகிரங்கப்படுத்துதல் வேண்டும்.