இறைவனின் செயல்கள் நன்மைக்கே…

கலாநிதிகுமாரசாமிசோமசுந்தரம்

ஒரு ஸ்தாபனத்தின்; தலைவர் செய்யவேண்டியபணிகளைஅட்டவணைப்படுத்திஉரியஆட்களிடம் ஒப்படைக்கின்றார் அவ்வாறுசெய்யும் போதுஒருசிறந்ததலைவர் ஒவ்வொருபணியையும் மிகச் சிறப்பாகஆற்றுவதற்குத் தகுதியும்,தகைமையும்,செயல்திறனும் கொண்டபொருத்தமானஒருவரிடம் ஒப்படைப்பார்.

அதனை இடையிடையேகண்காணித்துக் கொள்வார் ஆனால் குறுக்கீடுகள்,தலையீடுகள் செய்வதில்லைபணியைஆற்றுபவர் சுதந்திரமாகசெயற்படஅனுமதிக்கப்படுவதால் உரியகாலஎல்லைக்குள் பணியும் நிறைவேற்றப்படுகிறது. உற்பத்தியும் அதிகரிக்கிறதுஅத்துடன் செய்துமுடித்துவிட்டோமேஎன்றமகிழ்ச்சியும் திருப்தியும் எல்லோருக்கும் கிட்டுகின்றது.

பணியாளர்களின் செயல்திறமைகளில் நம்பிக்கைவைத்துப் பணிகளைஒப்படைத்துதலையீடு இன்றிசுதந்திரமாகசெயற்படஅனுமதித்தமையினால்தான் யாவும் இனிதுநிறைவேறியதுசிறந்ததலைமைத்துவம் எந்தஅளவிற்குஉற்பத்திபெருக்கத்திற்கும் பணியாளர் நல்லுறவுக்கும் வழிவகுக்கின்றதுஎன்பதைஅறிந்துகொள்ளலாம்.

வள்ளுவப் பெருந்தகை இதனைஒருகுறள் மூலம் விளக்குகிறார் “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனைஅவன்கண் விடல்”என்பதேஅக்குறள். இந்தச்செயலைஇன்னகாரணத்தால் செய்துமுடிப்பதற்குமிகப் பொருத்தமானவன் இவன் என்பதைஆராய்ந்துதுணிந்துஅச் செயலைச் செய்யுமாறுஅவனிடமேவிட்டுவிடவேண்டும் என்பதுஅதன் பொருளாகும். ஒருசிறந்ததலைமைத்துவம் இவ்வாறுதான் அமையவேண்டும் என்பதை இன்றையமுகாமைத்துவமும் ஒப்புக் கொள்கிறது.

தலையீடுகள்,குறுக்கீடுகள் அடிக்கடிஎழுவதற்குஅவநம்பிக்கைதான் காரணம். தலைவர் தமதுபணியாளர்களின் திறமையில் சந்தேகம் கொண்டால் இப்படிப்பட்டதலையீடுகளில் ஈடுபடுவதுதவிர்க்கமுடியாமல் போய்விடுகின்றன.
நாமும் இறைவனிடம் எங்களுக்காகச் சிலபணிகளைசெய்யும்படிகேட்கின்றோம். அவற்றுள் சிலவற்றைநிறைவேற்றிவைக்கின்றார். அப்பொழுதுநாம் மகிழ்ச்சிஅடைகின்றோம். அவரில் நம்பிக்கைகொள்கின்றோம் சிலசமயங்களில் நாம் கேட்டதை இறைவன் நிறைவேற்றிவைப்பதில்லை. அப்பொழுது இறைவனில் அவநம்பிக்கைகொள்கின்றோம். அவனைபலவாறாகவும் வைத்தும் விடுகின்றோம். எம்மால் செய்யக்கூடியசெயல்களைநாம் செய்துவிட்டுநம்மைப்பாராட்டியும் கொள்கின்றோம். இது இறைவன் செயல் நாம் வெறும் கருவியேஎன்றுநினைக்கக்கூட மனம் வருவதில்லை. எம்மால் ஆற்றமுடியாதவற்றை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு“இறiவா என் செயலால் ஆவதுஒன்றில்லைஎல்லாம் உன் செயலே”என்று கூறிவிடுகிறோம்.

கடவுளிடம் நம்பிக்கையும்,அவநம்பிக்கையும் மாறிமாறிஏற்படுவதால் தான் நமக்குசங்கடங்கள் உண்டாகின்றன. இறைவனுக்குத் தெரியும்,எமக்குஎதுநல்லது,எதுகெட்டதுஎன்றுஎண்ணிஎம்மைமுழுமையாகவிசுவாசத்துடன் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு இருந்தால் எமக்குநல்லதுநடக்கவும், கூடாததுநடவாமல் போகவும் கூடியமுறையில் இறைவன் பார்த்துக்கொள்வான். நாம் இறைவனின் செயல்களில் குறுக்கிடுதலோ,தலையிடுதலோஆகாது. எல்லாம் நன்மைக்குத்தான் என்றிருக்கவேண்டும். இறைவன் நமக்குநல்லவற்றைத்தான் செய்வான் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும். எமக்குத் தீமையாகதோன்றுவனஉண்மையில் எமக்குநன்மையாகவிளையக்கூடும். அதுஎமதுசிற்றறிவுக்குவிளங்காது. ஆனால் இறைவனுக்குத் தெரியும் அவ்வாறுநன்மையாகதோன்றிதீங்குவிளைவிக்கக்கூடியனவற்றைஎமக்குஅளிக்கமாட்டான். அதுவே இறைவனின் கருணை.

மகாபாரதப்போர் முடிவில் கண்ணன் தனக்குத் தேரோட்டியாகஅமர்ந்தமைபற்றிஅருச்சுனன் சற்றுபெருமிதம் அடைந்தான். தேரைவிட்டு இறங்குவதுமுதலில் தேரோட்டிஅதன் பின்னரேதலைவன் என்றமுறையில் கண்ணனைமுதலில் இறங்கச்சொன்னான் அருச்சுனன். ஆனால் தேரோட்டிகண்;ணனோஅருச்சுனன்தான் முதலில் இறங்கவேண்டுமென்றுவற்புறுத்தினான். கொஞ்சநேரம் இருவரும் வாதாடினார்கள் கண்ணன் பரமாத்மாஎன்பதைமறந்துதேரோட்டிதானேஎன்றுஅருச்சுனன் நினைத்ததேஅவனின் அகம்பாவத்திற்குகாரணம். கடைசியில் அருச்சுனம் வேண்டாவெறுப்புடன் தேரைவிட்டுகீழே இறங்கினான். அதன் பின் கண்ணன் இறங்கினார் கண்ணன் இறங்கியதுதான் தாமதம் உடனேதேர் தீப்பற்றிக்கொண்டதுபகைவர்கள் எய்தநெருப்பைஉமிழுகின்றஅம்புகள்,மற்றும் ஆயுதங்கள் தேரில் வந்துசொருகியிருந்தன. கண்ணன் தேரில் இருக்கும் வரைஅவற்றால் எதுவும் செய்யமுடியவில்லை. கண்ணன் இறங்கியதும் அவைதேரைஎரியச்செய்துவிட்டன. அருச்சுனன் மரியாதையைப்பார்த்து இறங்காமலிருந்திருந்தால் தீஅவனையும் பற்றியிருக்கும்.

இவ்வாறு இறைவனின் ஒவ்வொருசொல்லும் செயலும் எம்முடையநன்மைக்குத்தான் என்றுஎண்ணிநடந்துவந்தால் எமக்குஒருபொல்லாப்பும் இல்லைஎன்பதைஉணர்த்தவேகண்ணன் இவ்வாறுசெய்தார். அதைவிட்டு இறைவனின் நடைமுறைகளில் நாம் குறுக்கீடுசெய்வதால் நன்மைஏற்படாது. இறைவனின் ஒவ்வொருசெயலும் பொருள் பொதிந்தது. நாம் இறைவனிடம் எம்மைமுழுமையாகஒப்படைத்துவிட்டால் அவன் எமக்குநன்மையைக்கிட்டச்செய்வான். தீமையைக் கிடைக்காமல் செய்வான். இறைவன் செயல்கள் எல்லாம் நன்மைக்கேஎன்பதைஉணர்ந்துகொள்வோமாக.

நன்றி — அருள் ஒளி