உணவு

உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை
உடற் பயற்சியை விட ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது உணவு என்பது எவரும் அறிந்ததே. வாழ்க்கை இன்பமாக இருப்பதற்கும் துன்பமாக மாறுவதற்கும் உணவுதான் காரணமாகின்றது. 1930 தின் கடைசி காலத்திலும் 1940 தின் ஆரம்பக் காலத்திலும் நடைபெற்ற 2வது யுத்த காலத்தில் இலங்கையிலும் பஞ்சம் பரவிக்கொண்டது. அவ்வேலையில் இலங்கைக்கு அறிமுகமாக்கி அனுப்பி வைக்கப்பட்ட உணவுபொருள்தான் கோதுமை மா என்பதாகும். கூப்பனுக்கு இலவசமாக கொடுத்து பின்னர் மலிவான தீன் பொருளாக மாறிவந்துள்ளது. தற்போழுது நீரழிவு நோய் ஏற்பட ஒரு காரணமாகவுள்ளது.
அதனாலே மக்கள் தங்கள் உண்ணும் உணவுப் பழக்க வழக்கத்iதில் மாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அரிசி என்றால் தவிடுள்ள சிவப்பு அரிசியும் (கைக்குத்தரிசி) மா வகையென்றால் ஆட்டா மா குரக்கன் மா உழுத்தம் மா சிவப்பு அரிசி மா போன்றவற்றையும் பாவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
அரிசிக்கு மாற்றீடாக அல்லது அரிசியுடன் சேர்த்து வரகு அரிசியையும் பாவிப்பது சிறந்த நோயை உண்டுபண்ணாத உணவான இருக்கும்.
( ஆ…ர்)